எலியாவும் எலிசாவும் ELIJAH AND ELISHA 54-03-04 மாலை வணக்கம் நண்பர்களே. மீண்டும் இந்த மாலைப் பொழுதில் இங்கே கர்த்தராகிய இயேசு கிறிஸ்தவின் நாமத்திலே அவருடைய ஜனங்களுக்கு பிரசங்கிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. மற்றும் அந்த அருமையான பாடலுக்காக, அந்த ஸ்பானிஷ் பாடக குழுவிற்கு மீண்டும், என்னுடைய பாராட்டுதலை வெளிப்படுத்துகிறேன். உங்களுக்கு தெரியுமா, எப்பொழுதுமே எனக்கு வார்த்தைகளை புரியும் என்று சொல்ல முடியாது, ஆனால் அந்த ஆவியினால் பாடப்பட்ட பாடலை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதனுடைய வழி என்ன வென்றால், நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கலாம், ஒரு பிரசங்கத்தை வாசிக்கலாம், ஆனால் அந்தப் பிரசங்கத்தை போதிக்கிற மனுஷன் இல்லாமல் அது உங்களுக்கு புரியவே செய்யாது. அந்த ஆவி அதினோடே செல்கிறது. வாலிப பெண்களே மற்றும் வாலிப இளைஞர்களே, எங்கள் மீது உள்ள உங்களுடைய…..உங்களுடைய அன்பிற்காக நன்றி. எங்களுக்கு உதவி செய்ய நீங்கள் கீழே இறங்கி வந்த, உங்களுடைய உத்தமத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். தேவன் உங்களை எப்பொழுதுமே ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களோடு கூட இருந்து தேவனுடைய இராஜ்ஜியத்தில் இருப்பதிலேயே உங்களுக்கு மிக சிறந்ததையே தேவன் தரும் படியாக நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். மீதம் உள்ளதை மற்றவர்களும் பெற்றுக் கொள்வார்கள் என்பதை நம்புகிறேன். 2. மற்றும் ஒவ்வொரு முறையும், நீங்கள் இங்கே வந்து, ஒரு விசேஷித்த பாடலை மற்றவர்களோடு சேர்ந்து பாடுவதை நாங்கள் பாராட்டுகிறோம். மற்றும் நான் முதல் முறையாக பீனிக்ஸ்க்கு (Phoenix) வந்து, உங்களுடைய ஆலயத்தில் 2500 மக்களுக்காகாக ஒரு மதியம் ஜெபித்து, அவர்களோடு இருந்தது, என் ஞாபகத்திற்கு வருகிறது. அதுதான் எனக்கு இருந்ததிலேயே மிகப் பெரிய ஜெப வரிசையாகும். ஒரு மதியத்தில் 2500 மக்கள். தோராயமாக அவ்வளவு பேர் இருந்தனர். ஒருவேளை கொஞ்சம் கூடவோ அல்லது குறைந்தோ இருந்தனர், எங்களுக்கு அதை நிதானிக்க முடியவில்லை. நீங்கள் சற்று........ இங்கே இருக்கும் எல்லோருக்கும் நான் ஜெபிப்பதாக கூறி இருந்தேன். மற்றும், எப்போது அந்த. .... இடங்கள் காலியானவுடன், மீண்டும் அவை நிரப்பப்பட்டன. சற்று நேரம் கழித்து அவை காலியாயின, மீண்டும் அவை நிரப்பப்பட்டன. மற்றும் ஒரு நாள் முழுவதும் அவ்வாறாகவே இருந்தன. ஆகையால், அன்று சுமார் 2500 ஜனங்கள் அந்த ஜெப வரிசையின் மூலமாக சென்றனர் என்பதை தீர்மானித்தனர். ஆகையால் அந்த மதியம் அநேகர் சுகமாக்கப்பட்டும், இரட்சிக்கப்பட்டும் இருந்த முடிவை அறிந்து அதை குறித்து மிகுந்த சந்தோஷம் அடைகிறோம். இன்றும் தேவன் எப்படி ஆசீர்வதித்தார் என்பதை அனேகருடைய சாட்சி உலாவிக் கொண்டிருப்பதின் மூலமாக அறியலாம். 3. நிச்சயமாக மீண்டும் மேடிசன் ஸ்கொயர் கார்டனை (Madison Square Garden) நினைத்துக் கொண்டிருக்கிறேன். போன முறை நான் இங்கே இருக்கும் போது, அங்கே காணப்படும் அந்த வெளிச்சத்தின் கீழ் எனக்கு இடம் அளித்தனர். ஒன்று அல்லது இரண்டு இரவுகள் இருந்த அந்த நேரத்தில் எடுத்த படத்தை, நான் எனது வீட்டில் பிரேம் செய்து வைத்துள்ளேன். அது போல தான் இப்போதும். இப்போது, நாளை இரவோ, அல்லது சனி இரவோ அல்லது எப்போதாவது ஆராதனைக்காக இந்தியர்கள் இங்கு வருவதாக எனக்கு தெரிந்தது. அந்த சுவிஷேசகர் இங்கே இருப்பார் என்றால், நான் முன் பதிவு செய்வதற்காக செல்ல வேண்டி இருக்கிறது. அதை செய்வதற்கு, முற்றிலுமாக அது என்னுடைய எண்ணமாக தான் இருக்கிறது. ஆனால் எனக்கோ இது மிகவும் இக்கட்டான நேரமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எனக்கு.....எனது வீட்டிற்கு செல்ல ஐந்து நாட்கள் ஆகும். ஆகையால் எனக்கு நேரம் போதாது. நான் ஒரு மதியம் இங்கு வந்து மறு நாள் காலையிலேயே கொலோசியத்தில் உள்ள கொலம்பஸ், ஓஹியோ செல்ல வேண்டியுள்ளது. மதியம் அங்கிருந்து மீண்டும் லூயிஸ்வில், கென்டக்கிக்கு திரும்பி வருவேன். ஆகையால் அது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல, நமது நேரம் இப்படியாக எடுக்கப்பட்டு இருப்பதால் நமக்கு அதை சரிவர செய்வதற்கு நேரமே போதாது. 4. நான் திரும்பி வந்து விடுவேன் என்று அந்த இந்தியர்களுக்கு சொன்னது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. மற்றும் நான்……நான் அதை கண்டிப்பாக செய்வேன். எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியுமா அவ்வளவு சீக்கிரமாக திரும்புவேன். ஒரு வேளை அங்கிருந்து வெளியே வந்த, மற்றும் ஒரு நாள் அவர்களோடு இருப்பதைக் காட்டிலும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் முன்பதிவில் அவர்களுக்கு தருவேன். அவர்களோடு ஜெபித்து அவர்களுக்கு உதவி செய்வேன். அவர்களுக்கு இப்போது, அங்கே ஒரு சிறந்த கூட்டம் ஒன்று இருப்பதை அறிந்திருக்கிறேன். அந்த .......அங்கே இருக்கிற சில சபைகளுக்கு அது ஒரு சிறந்த நேரமாக இருக்கிறது. அங்கே ஒரு சகோதர தெய்வீக சுகம் அளிப்பதை பற்றி பிரசங்கித்து கொண்டிருப்பதை நான் கேள்விப்பட்டேன். மற்றும் அது அருமையான வல்லமை. இங்கே இருக்கும் உங்களுக்கு நான் தெரிவிக்கிறது, என்னவென்றால், சுகவீனமாய் இருக்கும் அந்த மக்களுக்கு ஜெபிக்க, எனக்கு இருக்கும் அதே உரிமை தான் அவருக்கும், மேலும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அது சரிதானே. அவர் அதை விசுவாசித்து, மற்றும் அதை பிரசங்கித்து, பரிகாரம் செலுத்திய கிறிஸ்துவின் மீது அதை வைத்தால், குணமாகுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. மற்றும் மேலே, அங்க யாரோ ஒருவர் உதவி செய்ய இருப்பதற்காக நான் கர்த்தருக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். எல்லா இடங்களிலும்........எங்களுக்கு....... அந்த சிறந்த அழைப்பு வரும் போது...........அந்த மெசப்போதேமியா அழைப்பு தான் இப்போது அண்டசராசரத்துக்குரிய அழைப்பு. அப்படித்தானே எல்லா இடங்களிலும்? " எங்களுக்கு வந்து உதவுங்கள்." 5. மற்றும், வெளிநாடு செல்வதற்காக நாங்கள் மிகவும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். திரும்பவும் மக்களோடு...... பால்கனியில் உள்ளவர்களுக்கு நான் சொல்வதை கேட்கிறதா? செய்தி அங்கே உள்ளே வருகிறதா? எல்லாம் சரி. சென்ற முறை இங்கு வந்து இருக்கும்போது நான் சொன்ன ஒரு குறிப்பை குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் சொன்னேன் "இது ஒரு……..ஒரு மல்யுத்தம் செய்யும் ஒரு வலையம், மக்கள் மல்யுத்தம் செய்து கொண்டு, சண்டையிட்டு கொண்டிருப்பர்." அப்படிப்பட்ட தான ஒரு விளையாட்டை நானே செய்திருக்கிறேன். நான் அப்போது.........குத்துச்சண்டை போடுவேன். மூன்று மாநிலங்களுக்கு இடையான பேன்டம்வைட் சாம்பியன்ஷிப் (Bantamweight Championship) போட்டிகளில் வெற்றி பெற்று தோல்வி அடையவே இல்லை. சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்காக நான் அப்படியே அதை விட்டுக் கொடுத்து விட்டேன். ஆகையால்..........ஆனால் உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். என் வாழ்க்கையில் எப்பொழுதுமே இல்லாத, அதை விட மகா பெரிய யுத்தத்தை இப்போது பெற்றிருக்கிறேன். என் நண்பர்களோடு நான் சண்டையிடவில்லை, நான் சாத்தானோடு என்னால் எவ்வளவு கடினமாக சண்டையிட முடியுமோ அவ்வளவு கடினமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன். 6. குத்து சண்டையில் எதை எல்லாம் பாதுகாவலர் சொல்கின்றாரோ, எதையெல்லாம் கவனிக்க வேண்டுமோ, மற்றும் அது போன்ற காரியங்களும், பலதரப்பட்ட வித்தைகளையும் நான் எப்பொழுதுமே ஞாபகத்தில் கொண்டிருப்பேன். மற்றும் நீங்கள் நிச்சயமாக...... இந்த மிக பெரிய எதிரி இடம் சண்டையிடும் போது மிகவும் மிகவும் ஜாக்கிரதை உள்ளவர்களாக இப்போது இருக்க வேண்டும். ஆகையால் நான் சந்தோஷமாக நிச்சயமாக சொல்ல இருப்பது .......விளையாட்டு அரங்கத்தையோ விளையாட்டையோ, மற்றும் அது போன்ற காரியங்களோடு எனக்கு ஒன்றுமே இல்லை. அது சுத்தமாக இருக்கும் பட்சத்தில் அது ஒரு நல்ல காரியம் தான். நான் அவர்களுக்கு செவி சாய்ப்பதில்லை, அதோடு எனக்கு ஒன்றுமே இல்லை, காரணம் நான்......செய்ய மாட்டேன். என்னுடைய இரத்தத்தில் இருந்தது, ஆகையால் அதிலிருந்து நான் புறம்பே தள்ளி இருக்கிறேன். ஆனால், இப்பொழுதோ எனக்கு ஒரு மகா பெரிய சண்டை இருக்கிறது. என் எதிராளியோ ஒரு மகா பயங்கரமானவன். மற்றும் இவன் என் நண்பன் அல்ல, அவன் என் எதிராளியாகிய சாத்தான். ஆனால் என்னை சுற்றி அனேக காரியங்கள் இருக்கின்றன. அதற்காக நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். விசுவாசம், அதுதான் அந்த எதிரியை தோற்கடிக்க முடியும். மற்றும் கர்த்தர் அதை அருள்வாராக. 7. இப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றைய இரவு நாம் ஒரு புதிய இடத்தில் துவங்க இருப்பதால், நிச்சயமாக துவங்குவதற்கு முன்னால் சில நொடிகளுக்கு சிறு குழப்பம் இருக்கதான் செய்யும். ஆனால் கர்த்தர் அதை பொறுப்பேற்றுக் கொள்வார் என்பதை நிச்சயித்திருக்கிறேன். தேவனுடைய சில வார்த்தைகளை வாசிக்கும்போது, மற்றும் அவர் இங்கே இருந்து உதவி செய்வார் என்பதை நம்பினால்...... அவர் உறுதியாக அதை செய்வார். நீங்கள் அதை நம்புவீர்கள் தானே. 8. இந்த மதியான வேளையில் வேதாகமத்திலுள்ள 2 ராஜாக்களின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்கவிருக்கிறேன். ஜெப வரிசையை கூப்பிடுவதற்கு முன் அடுத்த 15 நிமிடங்களுக்கு ஒரு சில வர்ணனைகளை இந்தப் பகுதியில் இருந்து விவரிக்கிறேன். இது..........பலவீனமாக இருப்பதால், இதற்கு கீழே நாளைக்கு கிராடர் போடுவதாக அவர்கள் சொன்னார்கள். அது அதிக அளவு ஏடை தாங்க முடியாத அளவிற்கு சற்று சிறிய, இரண்டிற்கு ஆறு விகிதத்தில் அல்லது அது போல அமைப்பார்கள், ஆனால் நாமோ வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஒரு வழியை கண்டுபிடிப்போம். வெளிப்படையாக சொல்லப்போனால் நீங்கள் இங்கே வருவதற்கு அவசியம் இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு விசுவாசம் இருந்தால் போதும். மற்றவைகளை கர்த்தர் பார்த்துக் கொள்வார். அதை செய்வார் அல்லவா? மற்றும் இன்றிரவு எனக்காக நீங்கள் ஜெபித்துக் கொள்ளுங்கள். எனக்கு_ எனக்கு ஒருவனுக்குத்தான் உண்மையாகவே ஜெபம் தேவைப்படுகிறது. சுகவீனத்திற்காக அல்ல, அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும் பொழுது எனக்கு ஜெபம் மிகவும் தேவைப்படுகிறது. நீங்கள் பிரசங்கிக்கும் போது எவ்வளவு எதிர்ப்புகள் இருக்கும் என்று உணர்வீர்கள் என்றால்.......ஒருவர் கிறிஸ்துவை பற்றி பேசும்போது தெய்வீக வல்லமை அவனை சுற்றிக் கொள்ளும். விஷேசமாக வார்த்தையை எந்த விதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் அல்லது அது எப்படி ஜனங்களுக்கு வெளிப்படுத்த படுகிறது என்பதை பொறுத்தது. அதுதான் அந்த…..அந்த காரியம். வார்த்தையாகப்பட்டது, கடமைக்காக பிரசங்கிப்பது.... 9. இங்கே முன்பு ஒரு காலத்தில், ஒரு அரங்கத்துக்கு சென்றிருந்த போது ஒரு அருமையான தேவபக்தியுள்ள, மற்றொரு மனிதனை கண்டேன். அவர் ஒரு நல்ல சகோதரர், புகழ்பெற்ற ஆசிரியர், சர்வதேசம் அல்லது இந்த நாட்டின் பிரசித்தம் பெற்ற ஆசிரியர். எப்படியாயினும் அவர் தெய்வீக சுகம் அளிப்பதை மறுத்தார். அதிலிருந்து அவர் தனது மனதை மாற்றிக் கொண்டார். ஆனால் அந்த மதியம் அந்த அரங்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த 1500 அல்லது 1800 ஜனங்களோடே கிறிஸ்து உலக இரட்சகர் என்னும் தலைப்பில் பேசிக் கொண்டிருந்தார். ஜனங்களை கீழே வந்து அவரை ஏற்றுக் கொள்வீர்களா என்று வினவிக் கொண்டிருந்தார். அங்கே ஒரு பெண்மணி கீழே வந்து அவருடைய கரங்களை குலுக்கினாள். மற்றும் அதற்கு விரோதமாக ஒன்றுமில்லை. அவர் வெளியே சென்றார். அரங்கத்தில் உள்ளவர்கள் விடை பெற்றனர். அவர் வெளியே சென்றார், அவருடைய சபையார் அருமை யானவர்கள், நன்றாக உடுத்தி இருந்தனர், புத்திசாலிகளாக காணப்பட்டனர். அதனால் ஒரு தப்பும் இல்லை. வெளியே சென்றவர்களை அந்த ஊழியர் தலையை வணங்கியவாறு ஜனங்களிடம் விடை பெற்று பவ்யமாக அமரிக்கையாக வெளியே சென்றார். "ஓ என்ன அருமை என்று" நான் நினைத்துக் கொண்டேன். என்னுடைய கூட்டமோ கக்கத்தண்டங்களுடனும், சக்கர நாற்காலிகளோடும், நேரான மேல் சட்டைகளுடனும் இங்கே வருகிறார்கள். உங்களுடைய விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ண, அது ஒரு வித்தியாசமான காரியமாகும். பாருங்கள்? "கீழே இறங்கி வந்து, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்படுங்கள்." என்று இப்படி சொல்வது தப்பான காரியமல்ல. ஆனால் நீங்கள் என்ன பேசுகிறீர்களோ அதை எப்போது நிரூபித்து காட்டுகிறீர்களோ.......... அது சரிதானே. இயேசு கிறிஸ்து கீழே வந்து அதை செய்யும் போது...........ஆனால், சகோதரரே அது அவருடைய சுவிசேஷத்தில் இருக்கும் வரைக்கும், மற்றும் அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணிருந்தால் ஒரு காரியமும் உங்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், காரணம் அவர் அதை கண்டிப்பாக செய்வார். அது உண்மை. அவர் கண்டிப்பாக செய்வார். ஆமாம் ஐயா. ஒரே ஒரு காரியம் மட்டும் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அதை விசுவாசியுங்கள், மற்றும் அவரை உங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளுங்கள். மற்றும் அதை செய்வார் என்பதை நம்புங்கள், மேலும் மற்றவை எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார். ஆகையால், அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும் போது, மற்றும் அதைப்பற்றி சில நேரம் பேசி, மற்றும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் போது, கர்த்தர் ஒவ்வொரு வருக்கும் இந்த இரவு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவருடைய வார்த்தையை வாசிப்பதற்காக, இரண்டு ராஜாக்களின் புத்தகம் 3ஆம் அதிகாரம் 14 வசனம் துவங்கி 15 முடிய வாசிக்கலாம். 10. இப்போது இது எனக்கு புதுமையாக இருக்கிறது. உங்களுக்கு தெரியுமா, வழக்கம் போல நான் இங்க இருக்கும்போது இயக்குனர்கள் என்னோடே கூட இருந்து, மற்றும் அவர்கள் தான் வார்த்தையை பேசி பிரசங்கிப்பார்கள்.........மற்றும் நான் ஒரு மிகவும் மிகவும் மோசமாக பேசுபவன். அதற்குப் பிற்பாடு நான் இங்கே வந்த என்னால் இயன்ற வரைக்கும் நலமானவைகளை செய்து, அதற்கு பின் வியாதிஸ்தருக்காக ஜெபிக்க செல்வேனானால், அது ஒரு விதமான........அந்தக் கூட்டங்களில் தெய்வீக சுகம் அளிப்பதின் மதிப்பு நாம் பெற்றிருக்க வேண்டிய விதத்தில் அமையாது. இந்த கூட்டங்கள் இங்கே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன. "குணமாக்கும் ஆராதனையாக இல்லை" இந்த.....இந்தக் கூட்டங்கள் சுகம் அளிக்கும் கூட்டங்களாக அறிவிக்கப் படவில்லை. இது சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்காக அறிவிக்கப்பட்டது. மற்றும் கடல் கடந்து வருவதற்கு முன்பாக, நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டேன். குணமாக்கும் ஆராதனைகள் கடலினுடாக இருக்க வேண்டும். 11. அங்கு எவ்வளவு சுலபமாக இருந்தது என்று சொல்லுகிறேன். நீங்கள் அங்கே ஒரு 7500 அல்லது 10,000 மக்களுக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டு.....அதில் சிலருக்கு எது வலது கை அல்லது இடது கை என்று தெரியாமல் இந்தனர். அதில் சிலர்......... நல்லது, அதிக சதவீதம் உள்ளவர்கள், விசேஷமாக ஆப்பிரிக்காவிலும், மற்றும் அந்த இடங்களில், நிர்வாணமாக இருக்கின்றனர். அது ஒரு வேளை விசித்திரமாக தோன்றலாம். ஆனால் நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்மணி ஒரு குழந்தையை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பெற்றெடுத்தாள், அந்த குழந்தையை எடுத்து, கையில் ஏந்திக் கொண்டு நேராக சென்று விட்டாள், இப்படி ஒரு காரியம் நடந்தது என்று தெரியாத அளவுக்கு அவள் கண்டு கொள்ளவே இல்லை. மற்றும்....... அந்த காரியத்தில் மிகவும் பலமாக இருந்தனர். மற்றும் அவர்கள்........அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிர அவர்கள்........அவர்கள் இயற்கைக்கு மேம்பட்ட ஒரு காரியம் நடந்ததை கண்டால் இன்னும் ஒன்றுமே உங்களுக்கு தேவை இருக்காது. ஒரே ஒரு காரியம் மட்டும் அவர்கள் செய்வார்கள், அவர்கள் அங்கேயே அப்படியே எழுந்து, அவர்களுடைய சக்கர நாற்காலிகளையோ அல்லது கக்கத்தண்டங்களையோ அல்லது நடப்பதற்கு உபயோகித்திருந்த கருவியை அப்படியே போட்டு விட்டு , கட்டில்களை விட்டுவிட்டு, அவர்களுடைய படுக்கையை (pallets) எடுத்துக் கொண்டு, தேவனை பெற்றுக் கொண்டு, குணமாக்கபட்டு சந்தோஷமாக ஆர்ப்பரித்து கொண்டு வீட்டிற்கு செல்வர். பாருங்கள்? அது கடினமாகவே இல்லை. மற்றும் ஒன்றுமே இல்லை......... ஒரு பத்து நிமிடம் தான் எல்லாமே முடிந்து விட்டது. 12. 15 அல்லது 20 வியாக்கியாணிகளை ஒரு வேளை எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் "இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்" என்று இப்படி சொல்வீர்கள் என்றால். அந்த வியாக்கியானம் செய்பவர் உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்து, ஒரு வேளை அவர் இப்படி....."க்லக், க்லக், க்லக், க்லக்" என்று சொல்வார். அதற்கு அர்த்தம் "இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்." பெந்தகோஸ்து ஜனங்கள் அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்கும்போது, நான் இப்படியாக சொல்வதுண்டு. "எனக்கு எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. எப்படியோ அவர்கள் போடுகிற சத்தம் சரியான ஒன்று என்று தோன்றவில்லை. ஆனால் இது ஒன்று மட்டும் எனக்கு தெரியும்: ஒரு விதமான அர்த்தம் கொல்லாமல் நீங்கள் அந்த சத்தம் போட முடியாது. அது.......... ஏதோ ஒரு இடத்தில் உள்ள ஒரு விதமான பாஷை ஆகும். ஒரு இன மக்களோடு மற்றும் அவர்களுடைய காரியத்தோடு நீங்கள் தொடர்பு கொண்டால், அதற்கு, ஒரு விதமான அர்த்தம் உண்டு என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அது எந்த விதமான சத்தமாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. உறுமுதலோ, முனகுதலோ, மற்றவைகள் எதுவாயிருந்தாலும் சரி யாரோ ஒருவருக்கு அது அர்த்தம் கொள்ளும். 13. ஒருவேளை, நீங்கள் பேசலாம், இது ஒன்று, பிறகு அது ஒன்று, அது ஒன்று, அது ஒன்று. ஒருவேளை அது என்னவென்று அறிந்து கொள்வதற்கு முன்பே நீங்கள் கொஞ்சம் தண்ணீர் அருந்தி விட்டு உட்கார்ந்திருக்கலாம். நீங்கள், "இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன்" என்று கூறுவீர்கள். அது எல்லா வியாக்கியானம் செய்பவர்களுக்கு அறிந்து கொள்வதற்கும் முன்........ இப்போது நீங்கள் அவர்களுக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கோ செய்தி கிடைத்தவுடனையே, குறைந்த வார்த்தைகளிலே அதை சொல்லி மற்றும் அவர்கள் இப்படியாக சவால் விட்டு சொல்லும்படி செய்வீர்கள். இப்போது, நான் பேசுகின்ற இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றால் மற்றும் நான் செய்கின்ற காரியங்களை நீங்களும் செய்வீர்கள். மேலும் உலகின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று வாக்குத்தத்தம் (இப்போது, அவர் வார்த்தையை அடிப்படையாக கொண்டு) செய்திருப்பாரானால். இப்போது மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருந்தார் என்றால், மற்றும் ஜீவனுள்ளோரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், இந்த பூமியில் அவர் இருக்கும் போது என்ன செய்தாரோ அதையே இப்பொழுதும் செய்வார். அதை அவர்கள் நம்பும்படி கேட்டு பாருங்கள், ஒவ்வொருவரும் அதை கண்டால் மாத்திரம் நாங்கள் நம்புவோம் என்று சொல்வார்கள். பின்பு இவ்விடத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு மனிதனை எங்கிருந்தாவது இங்கே வரவழைத்து, எனக்கோ அவனுடைய பாஷையை பேச தெரியாத பட்சத்தில், இப்போது சற்று முன் பேசினதை அவன் அறியாமல் இருக்கும் போது, அவனை பார்த்தும் கூட இல்லாத பட்சத்தில், அவனை பற்றி கேள்விப்பட்டதே இல்லாமல் இருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் அங்கு நின்றுக்கொண்டு அவனுடைய வாழ்க்கையை பற்றி அவனுக்கு வெளிப்படுத்துவார் என்றால். எல்லோரும் அதை ஏற்றுக்கொள்வார். ஒவ்வொருவரும் அப்பொழுதே நம்புவர். சற்று அவர்களை நீங்கள் பாருங்கள்.....மற்றும் ஒரு ஜெபம் தான். 14. சகோதரர் போஸ் வர்த் (Bosworth) ஒரு அருமையான மனிதர் என்று நான் நம்புகிறேன். அங்கு அருகில்....... ஃப்ரெட் போஸ்வொர்த் (Fred Bosworth). சகோதரர் போஸ்வொர்த்தை எத்தனை பேருக்கு தெரியும்? நிச்சயமாக, பூரண சுவிசேஷ பதவியில் சுற்றி இருக்கின்ற அனேகமாக ஒவ்வொருவருக்கும் சகோதரர் ஃபிரட் போஸ்வொர்த்தை தெரியும். அவர் சொன்னார்" சகோதரர் பிரன்ஹாமே, அந்த ஒரு மத்தியானத்தில், ஒரு சிறிதளவு நிழல் கூட சந்தேகம் இல்லாமல், அதுவும் ஒரே ஒரு ஜெபத்தைக் கொண்டு குறைந்த பட்சம் 25 ஆயிரம் மக்கள் சுகம் பெற்றனர்." ஏதோ ஒரு காரியம் அந்த பேச்சு மேடையில் நடந்ததால், சற்று அந்த ஓலி வாங்கி இருக்கும் இடத்திற்கு நான் சென்றேன், மேலும் நான் ஜெபித்தேன். மேலும் அவர் சொன்னார், "சகோதரர் பிரன்ஹாமே நான் அங்கு நின்று கொண்ட அழுதேன்." சொன்னார், நான்_ நான், அவர்களை பார்த்த போது, அவர்கள் தங்களது பழைய கம்புகளையும் மற்றும் எல்லாவற்றையும் அடுக்கடுக்காக எடுத்து கொண்டு நகர்ந்து போனதை பார்த்தபோது, என் இருதயம் நொறுங்க அழுதேன். அப்படியே குணமாக்கப்பட்டு, சென்றுக் கொண்டிருந்தனர்........சொன்னார் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ஜனங்கள். 15. இப்போது அதே மாதிரி தான் என்னுடைய ஊழியமும் அமெரிக்காவில் நடந்திருக்க வேண்டிதாயிருந்தது. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், நான் ஒரு அமெரிக்கன். மற்றும் என்னுடைய தேசத்தை நான் நேசிப்பவன். அதுதான் இந்த உலகத்திலே உயர்ந்த நாடு. இப்போது நான் இங்கே நின்று கொண்டிருப்பதற்காக சொல்லவில்லை. இல்லை ஐயா! நான் சொல்வது உண்மை, ஆகையால் சொல்கிறேன். நான் பிரான்ஸ் தேசத்திலும், மற்றும் அதை சுற்றிலும் இருக்கும் போது இந்த நாட்டுக்காக மரித்த அநேக பிரன்ஹாம்களின் கல்லறையை கடக்க நேர்ந்தது. எனக்கும் அப்படி செய்ய நேரம் வரும் போது நானும் அவர்கள் செய்தது போல இலவசமாக அவ்வாறு செய்வேன். ஆனால் சகோதரனே இந்த நாட்டை சுற்றி நமக்கு நிறைய நிமிர்த்த (சரி செய்ய) வேண்டிய காரியங்கள் நிறைய உண்டு. மற்றும் நான் இதை என் உள்ளத்தில் உள்ள அன்பின் நிமித்தம் இதை சொல்கிறேன். நான் சந்தித்த தேசங்களில் ஏதாவது ஒரு தேசம் இருக்கும் என்றால் (நான் உலகத்தையே சுற்றி உள்ளேன்) எனக்குத் தெரிந்த தேசங்களில் ஏதாவது ஒரு தேசத்துக்கு ஊழியக்காரரின் தேவை இருக்கும் என்றால் அது அமெரிக்கா ஐக்கிய நாடுகள் தான் என்று திட்டவட்டமாக சரியானது என்று சொல்லுவேன். ஒரு படிக்காதவனை காட்டிலும் ஒரு படித்த புறஜாதியானவனோடு ஈடுபடுவது மிகுந்த கடினமாகும். அதாவது...........அவனுக்கு அதைப்பற்றி அதிகம் தெரியும். அது பின் தங்கியிருக்கும். படிப்பறிவில்லாதவன் பரிசுத்த ஆவி செயல்படுவதை பார்ப்பான். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். படிப்பறிவுள்ளவர்கள் (ஆங்கில செய்தியில் படிப்பறிவில்லாதவர்கள் என்று அச்சிடப் பட்டுள்ளது) சொல்வார்கள் "அது மனோ சம்பந்தமுறையில் தொலை நுண்ணுணர்வாகும்". "அதற்கு ஒன்றுமே கிடையாது. அற்புதத்தின் நாட்கள் கடந்து சென்று விட்டன என்று டாக்டர் ஜோன்ஸ் சொன்னார்கள், அல்லது யாரோ ஒருவர் எதையோ ஒன்றை சொன்னார். 16. மனதளவில், அந்த பரிதாபத்துக்குரிய அமெரிக்கர்கள் இவ்வளவு சந்தேகத்துடன் இருப்பது ஆச்சரியப்படுவதற்கு அல்ல. அவர்களுக்கு எதை நம்புவது என்றே தெரியவில்லை. ஒருவர் இப்படி என்று சொல்கிறார், ஒருவர் அப்படி என்று சொல்கிறார், மற்றும் ஒருவர் இது என்கின்றார். அது உண்மை தான் அல்லவா? நன்று, அந்த பரிதாபத்துக்குரிய ஜனங்கள். இன்னும் சில இரவுகளில், எனக்கு ஒரு தருணம் கிடைக்கும் போது, ஆராதனையில் பிரசங்கிக்கும்போதோ அல்லது ஞாயிறு மதியம் அன்றோ இவைகளைப் பற்றி நான் பிரசங்கிப்பது ஆச்சரியப்படுவதற்கு அல்ல. மற்றும் இந்த காரியங்களில், மத சம்பந்தமாக பேசும் போது, இந்த உலகத்திலேயே அமெரிக்கர்கள் போல மோசமாக குழப்பமுற்றவர்கள் யாரும் இல்லை என்பதை நான் அறிவேன். (அது சரிதானே). நான், ஆப்ரிக்காவிலுள்ள ஆட்டன்டாட் மக்களிடம் சென்ற போது, ஒழுக்கமாக எப்படி வாழ வேண்டும் எனபதை பற்றி கற்பிக்க இங்கு வந்தால் நலமாயிருக்கும். இந்தியாவுக்கு ஊழியக்காரர்கள் என்பதை பற்றி நான் பேசும்போது அவர்கள் சொன்னார்கள், "நீங்கள் எங்களுக்கு என்ன கற்பிக்கப் போகிறீர்கள்? நம்ம மனைவிகளை எப்படி விவாகரத்து செய்வது என்பதை பற்றியும், மற்றும் விஸ்கி குடித்து மற்றும் இங்கு செய்வதை போல எல்லாவற்றையும் செய்து மேலும் எங்கள் நாடு கிறிஸ்தவ நாடு? என்று சொல்லி கொள்வதற்கா? அங்கு, அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள், உங்களுக்கு தெரியுமா? 17. ஓ! அவர்களுடைய ஒழுக்கமானது நம்முடைய ஒழுக்கத்தை காட்டிலும் எவ்வளவோ மேலானதாக இருக்கிறது. நம்முடைய ஒழுக்கமானது அவர்களுடைய நிழலில் கூட இல்லை. அது சரிதானே. உலகத்திலேயே அதிகமான விவாகரத்துக்கள் வேரூன்றி நிற்பது அமெரிக்காவில் தான். "நீங்கள் எங்களுடைய மனைவிகளை எப்படி விவாகரத்து செய்வது என்பதை கற்பித்து, மேலும் அதுதான் கிறிஸ்தவம்" என்று கூறுகிறீர்களா? ஒவ்வொரு மூலையிலும் எப்படி விஸ்கி கடைகளை வைப்பது என்றும், குடித்துவிட்டு மேற்கொண்டு அப்படியே செய்வதும், முகமதியர்களை விட நாங்கள் மேல் என்று சொல்லி, மேலும் அதுதான் கிறிஸ்தவம் என்று சொல்கிறீர்களா? ஒழுக்கமாக சொல்லபோனால் அவர்கள் ஒழுக்கத்தை பற்றி பேசுகிறார்கள். பரலோகத்தின் இந்தப் பக்கத்தை பார்க்கும்போது, கிறிஸ்தவம் தான் உள்ளதிலேயே மிகவும் சுத்தமாகவும் பரிசுத்தமான காரியம் ஆகும். ஆனால் அதை பிரதிநிதி படுத்துகிறவர்கள் தான் அதை உடைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது உண்மை தானே. அது பிரதிநிதிபடுத்துபவரை பொறுத்தது. நம்மை நாம் ஒரு கிறிஸ்தவ தேசம் என்று அழைக்கிறோம். மற்ற நாடுகளை விட நம்முடைய தேசத்தை ஒரு கிறிஸ்தவ தேசம் என்றே சொல்ல முடியாது. சரியா. நாம் அப்படித்தான் நம்மை கூறிக் கொள்கிறோம். ஆனால் ஒரு கிறிஸ்தவனுக்கு ஒரு தனிப்பட்ட அனுபவம் இருக்கும். அவன் தேவனுடைய ஆவியால் மீண்டும் பிறப்பது தான் அவனை கிறிஸ்தவனாக்கும். ஒரு குளிர்ந்த அறிக்கையிட்டு, ஆலயத்திற்கு சென்று மற்றும் மனம்............வாழ்வது கிறிஸ்தவம் அல்ல. உங்கள் கனிகள் நீங்கள் யார் என்று சொல்லும். அது சரிதானே? அது உண்மை. 18. ஆகையால் அமெரிக்காவில் கர்த்தரின் அடையாளங்களும் அற்புதங்களும் நடைபெறும். நேற்று இரவிலோ அல்லது முந்தின இரவில் (இந்த இரண்டு இரவுகளில் ஏதோ ஒரு இரவு) நடந்ததை இந்தியாவில் உள்ள மும்பையில் நடைப்பெற்றிருக்கும் என்றால் இயேசு கிறிஸ்துவுக்காக 10 லட்சம் ஆத்துமாக்களை வென்றிருக்கலாம். ஆனால் ஜனங்கள் நமது கூட்டங்களில் நடந்து உள்ளே வந்து மற்றும் வெளியே போகும் போது என்ன சொல்வார்கள் என்றால்" நன்று! அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ". "அவன் ஒரு பளபளப்பாக்கபட்ட ஜோஷியக்காரன், அதுபோல ஏதோ ஒன்று" ஆமாம். " அப்படியே _ ஒரு மனோ சம்பந்தபட்ட அந்த ஆள் ஒரு நிஜமான மனோதத்துவ ஞானி" அது _ அது _ அது தான் கல்வி கற்றவர்கள் என்பது. கல்வி (எப்படியாயினும் அதன் சிறந்ததிலே) கிறிஸ்தவதிற்கு உள்ளதிலே ஒரு பெரிய சாபமாகும். அவர்களை படிப்பிக்க, படிப்பிக்க அவர்கள் தேவனுக்கு தெரிந்ததை விட அதிகமாக தெரியும் என்ற அளவுக்கு வந்துவிடுவர். பாருங்கள்? அங்கு தான் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாமல் போய்விடுகிறது. தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்துகிறவனுக்கு கர்த்தர் மற்றெல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நான்..........நீங்கள் கர்த்தரை மட்டும் நம்புங்கள். நான்.........எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இங்கு உள்ளனர். இந்த உலகத்தில் உள்ள எல்லா கல்வியும் அடுக்கடுக்காய் அவர்களுக்குள் செலுத்தி, மற்றும் இயேசு கிறிஸ்துவை தெரியாமல் எப்படி இதெல்லாம் செய்யலாம்........என்பதை அறிந்திருப்பதை காட்டிலும், அவர்களுக்கு அ, ஆ, இ, ஈ, தெரியாமல் இயேசு கிறிஸ்துவை மட்டும் தெரிந்திருந்தால் போதுமானதாய் இருக்கும். அதெல்லாம்.......... எனக்கு, அவர்களுக்கு இயேசகிறிஸ்துவை மட்டும் தெரிந்திருந்தால் போதும். அது சரிதானா. ஆமென் 19. நன்று, நான் வேதாகமத்தில் உள்ள வசனங்களை வாசிக்கிறேன். நான் அதை செய்யவில்லை என்றால்? 14 வது வசனம். அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவு மாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி, 2 இராஜாக்கள் 3:14-15 20. இப்போது சில நொடிகளுக்கு நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. மற்றும் இங்குள்ள கைகுட்டைகளுக்கும் நான் ஜெபிக்க விரும்புகிறேன். எங்கள் இரக்கமுள்ள பரலோகத்தின் பிதாவே, இந்த வார்த்தைகளுக்கு ஆக்கியோனே, இந்த இரவு எங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, பாவமும் ஊழலும் நிறைந்த வாழ்க்கையிலிருந்து, இரட்சித்து, மகத்துவமான பரிசுத்த ஆவியின் வழியாக எங்களை இப்போது நடத்திக் கொண்டு செல்கின்றதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த கைகுட்டைகளை கொண்டு வந்த மக்களின் விசுவாசத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மற்றும், இப்பொழுது அன்பான இரக்கமுள்ள தகப்பனே, சுகவீனமாய் இருக்கும் சரீரங்களுக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால், என்னுடைய கரங்களை அவர்கள் மேல் வைக்கும் போது, அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுதும், பிதாவே இங்கு இருக்கும் அனேக வயது சென்ற ஏழை தாய் தகப்பன்மார்களுக்கு, தாங்கள் சுகமாயிருப்போம் என்ற ஒரே ஒரு நம்பிக்கை இருக்குமாயின் அதற்காகவே இங்கு காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணருகிறேன். அவர்களுடைய மருத்துவர்கள் தங்களுடைய எல்லா இரக்கத்தாலும், அவர்களுடைய சுகத்திற்காக தங்களால் இயன்ற மட்டும் முயற்சித்தனர். இப்போ அது மருத்துவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாய் ஒருவேளை இருக்கலாம். நீர் மட்டும்தான் அதை நிறுத்த முடியும். 21 இன்றிரவு இந்தக் கைக்குட்டைகளை இங்கே இந்த ஜனங்களுக்கு அனுப்புவதற்கு கிறிஸ்தவ மக்கள் போதுமான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதற்காக நான் தகப்பனே உமக்கு நன்றி கூறுகிறேன். தகப்பனே ஒருவர் கூட, சுகம் பெறாமல் போகக்கூடாது, எல்லாரும் சுகம் அடைய வேண்டும். அதை அவர்களுக்கு அருளும், தேவனே. இப்போது, பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனின் வார்த்தையை எடுத்து அதை பேசுபவரின் உதடுகளையும், கேட்பவரின் இருதயத்தையும் விருத்தசேதனம் பண்ணும் படியாக கேட்கிறேன். இவைகளை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 22. இன்று இரவு நான் சற்று உடல் சோர்வுற்று இருக்கிறேன். கொஞ்சம் நரம்பு தளர்வுற்று இருக்கிறேன். சற்று நேரத்துக்கு முன், 130 மைல்களை சுமார் இரண்டு மணி நேரம் வாகனம் ஓட்டிக் கொண்டு வந்ததால், நிஜமாகவே_ நிஜமாகவே, சோர்வுற்றி ருக்கிறேன். மற்றும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அது கடினமாகும் வரைக்கும் இந்த கூட்டங்கள் சென்று கொண்டிருக்கும். இப்பொழுது, நான் உங்களுடைய நேரத்தில், சில கண பொழுது பேசிவிட்டு, கூடுமானால், ஜெப வரிசையை சரியாக 9:00 மணிக்கு துவங்கலாம் என்று இருக்கிறேன். 23. இப்போது, வாசித்த இந்த வேதாகம பகுதியானது எந்த சமயத்தில் நடைபெற்றது என்றால், ஆகாப் ராஜா யூதாவின் மீதோ அல்லது இஸ்ரவேலின் மீதோ வெகு காலமாக அரசாண்டு, மற்றும் அவன் மரித்த பின்பு அவனுடைய புதல்வன் அந்த ஸ்தானத்தை எடுத்த போது நடைபெற்றது. மற்றும் யூதாவின் ராஜாவாக இருந்தவர், யோசபாத் ஒரு தேவனுக்கு பயந்த, நீதிமானாக இருந்த மனுஷன். மற்றும் அங்கே......அந்த...... புறஜாதியான தேசங்கள், யுதாவுக்கு அல்லது இஸ்ரவேலுக்கோ எதிராக வந்தபோது .....இஸ்ரவேலின் ராஜா யூதேயா ராஜாவிடம் சென்று தன்னோடு போருக்கு செல்ல கூட்டு வைக்குமாறு கேட்டுக்கொண்டான். அதனால் தனக்கு எதிராக வரக்கூடிய ராஜாவிடம் அவன் சென்று போர் புரிய உதவும் என்று சொன்னான். என்ன ஒரு மோசமான தவற்றை நீதிமானாக இருந்த அந்த மனிதன் யோசபாத் அந்த நேரத்தில் செய்தார். அவன் அவ்விசுவாசிகளோடு இணைந்து கொண்டான். மற்றும் எந்த ஒரு மனிதனும் ஒரு அவிசுவாசியோடு இணைந்து கொண்டால் "இரண்டு பேர் ஒற்றுமையாக இல்லாத பட்சத்தில் எப்படி சேர்ந்து நடப்பார்கள்." என்று இயேசு சொன்னார். அவிசுவாசிகளோடு நீங்கள் ஒரு போதும் இணைத்துக் கொள்ள வேண்டாம். வேதாகமம் "அவிசுவாசியோடு, விசுவாசி பினைக்க வேண்டாம்" என்று சொல்லுகிறது. இங்கு, சில காலத்திற்கு முன்பு, அந்த கடைசி போர் நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் நாங்கள் ரஷ்யாவோடு இணைந்து கொண்டு இருக்கும்போது எப்படி இது இருக்கும் என்று வியந்தது உண்டு. நன்று, அங்குதான் விஷயமே. சிலுவையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால், இரட்டிப்பான சிலுவை நமக்கு கிடைத்தது. அதுதான் விஷயம். 24. இந்த மகா பெரிய ராஜாக்கள்.............மற்றும் ஒரு காரியம், நீங்கள் ஒரு அவிசுவாசியாடே இணைந்திருந்தால். நீங்கள் கவனிக்காத பட்சத்தில் அவர்களுடைய வழிகளில் நீங்கள் செல்வீர்கள். அவர்கள் அந்த பிரயாணமாக 7 நாட்கள் வனாந்தரத்துக்குள் சென்று, தேவனிடம் விசாரிக்காமல், தேவனை முன்னிட்டு செயல்படாமல் போருக்கு செல்ல முற்பட்டனர். இப்போது, ஒரு வேளை யோசபாத் அமர்ந்திருந்து, மற்றும் ஏதோ நடப்பதை குறித்து அலட்டிக்கொள்ளாமல் இருந்திருப்பார் என்றால் நான் நினைக்கிறேன், அவர் முதலில் தேவனிடம் விசாரித்திருந்திருப்பார். இந்த இரவோ அல்லது ஏதோ ஒரு இரவோ, நான் நம்புகிறேன். இந்த ஆராதனை சமயத்தில், பரிசுத்த ஆவியானவர் இந்த ஜனங்கள் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கும் போது, அதை நீங்கள் வெகு சீக்கிரமாய் நிதானிப்பதற்கு முன்பு, நீங்கள் அமைதியாக அமர்ந்திருந்த முதலாவது அதைப் பற்றி தேவனிடம் விசாரியுங்கள். மற்றும் சொல்லுங்கள், "கர்த்தாவே, இது என்ன? நீங்கள் எனக்கு சொல்லுங்கள். இது நீங்கள் தானா? பின்.......கர்த்தர் உங்களிடம் அதை பற்றி பேசுவார். 25. இப்போது, அவர்கள் ஏழு நாட்களுக்கு செல்லும்போது, அந்த ஏழு நாட்களுக்கு ஒரு திசை காட்டும் கருவியை கூட தேடாமல் அல்லது எடுக்காமல் சென்றுவிட்டனர். அவர்கள் அந்த வனாந்தரத்துக்கு செல்லும்போது, அங்கே அவர்களுக்கு தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. அவர்கள் மரித்துப் போகும் அளவிற்கு ஆளாகி விட்டனர். மற்றும் யோசபாத் ஒரு நீதிமானாகவும், தேவ பக்தி உள்ள மனிதனாக இருந்ததினால், அந்த சூழ்நிலையை பற்றி நிதானிக்கும் புத்தி இருந்தது." இங்கு யாராவது நமக்கு எங்கையாவது ஒரு விசுவாசமுள்ள ஜெபத்தை ஏறெடுக்கவும் அல்லது அதுபோல செய்யவும் இங்கில்லையா என்று கேட்டான். அதுதான் ஒரு கிறிஸ்தவனுடைய வழி, அப்படித்தானே? அவன் பிரச்சனைக்குள் ஆகும் போது அவன் ஜெபத்தை குறித்து சிந்திப்பான், அல்லது யாராவது உதவி செய்ய முடியுமா என்று பார்ப்பான். அவன் சொன்னான், விசாரிப்பதற்காக ஒரு தீர்க்கதரிசி இங்கு இல்லையா என்று கேட்டான். 26. அவன் சற்று தாமதமாக இருந்தாலும் அந்த எழு அல்லது எட்டு நாட்களுக்கு முன், அவன் புறப்படுவதற்கு முன்பே யோசித்து இருந்திருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றிக்கும் மேலாக, கர்த்தருடைய இரக்கம் இருந்தது. அவர்களில் சிலர் சொன்னார்கள் "ஆமாம், எலியாவின் கைகளின் மேல் தண்ணீர் ஊற்றிய எலிசா இதோ இங்கே இருக்கிறார்" வேறு விதமாக சொல்லப்போனால், அவருக்கு ஒரு உண்மையான தீர்க்கதரிசியோடு தொடர்பு இருந்தது. எலியா ஒரு உண்மையான தீர்க்கதரிசி. மற்றும் எலிசா அவரது சால்வையை போர்த்திக் கொண்டிருந்தார். மற்றும் அந்த இரண்டு தீர்க்க தரிசிகள் எவ்வளவு அழகான மாதிரி. நமக்கு மட்டும் இந்த இரவு நேரம் இருக்குமானால் அந்த காரியங்கள் சரியாக எந்த இடத்தில் பொருத்த வேண்டும் என்பதை பற்றி பேசலாம். அவர்கள் கிறிஸ்துவுக்கும், சபைக்கும் ஒரு பரிபூரண மாதிரியாக இருக்கிறார்கள். தேவனின் வல்லமை உள்ள தீர்க்கதரிசியாகிய எலியா கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறார். மற்றும் கவனியுங்கள், அவர் எடுத்துக்கொள்ள படுவார் என்பதை அறிந்திருந்தும், அவர் எடுத்துக் கொள்வதற்கு சற்று முன்பாக, தேசத்திற்கு ஒரு சாட்சியை வைக்காமல் அவர் சொல்லவில்லை. தன்னுடைய இடத்துக்கு பதிலாக ஒரு மனிதனை தயார் செய்து வைத்தார். கர்த்தருடைய சாட்சி. 27. இதே காரியத்தை கிறிஸ்து எவ்வளவு அழகாக செய்தார். அவர் செல்வதற்கு முன்பாக, கர்த்தருடைய சாட்சியோடு, ஒரு சபையை ஆயத்தம் செய்து வைத்தார். உலகின் முடிவு பரியந்தம், எல்லா சபை காலங்களிலும், அந்த சபை சாட்சியாக இருக்கும் படியாக அதை அபிஷேகம் செய்தார். நான் நினைக்கிறேன், எலிசா உழுது கொண்டிருந்த போது, ஒரு காளையை கொன்று அதன் நுகத்தடியை எடுத்து, மற்றும் அதுபோல காரியங்களை செய்து, ஒரு விருந்து வைத்து, அந்த இறைச்சியை வறுத்த போது, அந்த சால்வையை அவன் மீது எரிந்து விட்ட பிறகு நடைபெற்றது. அவன் தன் தகப்பனிடமும், தாயிடமும் விடை பெற்று எலியா பின்னே போக தொடர்ந்தான். 28. கவனியுங்கள், எப்படி கிறிஸ்தவர்கள் அபிஷேகம் பெற்ற உடனே, சில சமயம் சோதிக்கப்படுகின்றனர். ஆனால் எலிசா ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தான் மற்றும் அவன் சொன்னான்.... "நீ இங்கேயே தரித்திரு, கர்த்தர் என்னை கீலேயாத்துக்கு_ கில்காலுக்கு அழைத்தார். " ஆகையால் "தேவன் உயிரோடு இருக்கும் மட்டும், மற்றும் உன்னுடைய ஆத்துமா உயிரோடு இருக்கும் மட்டும், நான் உன்னை விட மாட்டேன்" என்று அவன் சொன்னான். அது எனக்கு பிடிக்கும். அவனோடு சரியாக கூடவே இருந்தான். அவன் தொடங்கினான், இப்போது அதனூடாக சென்றுக் கொண்டிருக்கிரான். நாங்கள் ஒரு சிறு பாடலை பாடுவதுண்டு. நான் எடுக்கின்ற பாதை, தேவனால் ஒதுக்கப்பட்ட சிலரோடு நான் இயேசுவோடு தொடங்கினேன், இப்போது அதினூடாக சென்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பழைய பாடலை நீங்கள் எப்போதாவது கேட்டு இருக்கிறீர்களா? ஒ, நான் இந்த வழியாக முதன் முதலில் வந்தபோது இந்தப் பாடலை நான் கேட்டிருக்கிறேன் 29. இப்போது கவனியுங்கள். "அவன் சென்றுக் கொண்டிருந்தான் மற்றும் அவன்........அதற்குப் பிறகு அவன் பட்டணத்துக்கு அவனோடே கூட சென்று கொண்டிருக்கும் போது அவன் சொன்னான், "கர்த்தர் என்னை அந்த தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கு என்ன அனுப்புகிறார்" அதனால், "நீ இங்கேயே இரு என்று அவன் சொன்னான்" சொன்னான், "கர்த்தர் உயிரோடு இருக்கும் மட்டும், மற்றும் உம்முடைய ஆத்துமா இருக்கும் மட்டும் நான் உன்னை விடமாட்டேன்." தொடர்ந்து தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கு அவன் சென்றான். பயணத்தின் இரண்டாம் நிலை. கவனியுங்கள், எப்பொழுதுமே இப்படி அவசரமாக செல்வது உங்களை தவறவிட நேரும். ஆனால் ..........ஒருவேளை ஒரு மாதிரியாக இருப்பார்கள் என்று சொன்னால் , அவர்கள் கிறிஸ்துவின் திட்டத்தையும் மற்றும் இந்த காலத்தின் சபையையும் சரியாக பின்பற்றவேண்டும். இரண்டாம் கட்டப் பிரயாணத்தில் கில்காலில் இருந்தவர்களைவிட படிப்பறிவோடு, அதிக இறையாண்மையில் உள்ளவர்களிடன் வந்தனர். அந்த தீர்க்கதரிசிகள், தீர்க்கதரிசிகளின் கல்விக்கூடம், படிப்பறிவு உள்ளவர்கள். எப்படியாயினும் அவர்கள் தீர்க்கதரிசனம் உள்ளவர்களாக தென்படவில்லை. ஒருவர், ஒரு நாள் வெளியே சென்று பட்டாணியை எடுத்து வருவதற்கு பதிலாக சில காட்டு காய்களை கொண்டுவந்தார். அந்த மனிதனுக்கு பட்டாணிகளுக்கும், காட்டு காய்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால்? எனக்கு தெரியாது. எல்லாம் சரி, அந்த வழியாகத்தான் சில தீர்க்கதரிசிகளின் பள்ளிகள் இந்த நாட்களில் செயல்படுகின்றன. அது அப்படித்தானே? ஆவிக்குரிய விஷயங்களுக்கும் ஆவியுலக விஷயங்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாம் சரி. கவனியுங்கள் 30. அதற்கு பிற்பாடு தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கு சென்றபிறகு, அவர் சொன்னார், " நீ இப்போது இங்கேயே இரு. கர்த்தர் என்னை யோர்தான் மட்டும் அழைக்கிறார்." அவர் சொன்னார் "கர்த்தர் உயிரோடு இருக்கும் மட்டும், உம்முடைய ஆத்துமா உயிரோடு இருக்கும் மட்டும், நான் உன்னை விடுவதில்லை". இப்போது நீங்கள் கவனிப்பீர்கள் என்றால், அவன் அந்த சால்வையை அவன் மீது வைத்து, அந்த வயலில் அவன் மேலே எரிந்து விட்டு, மற்றும் என்னை பின்பற்றி வா என்று சொன்னார். அந்த ஆசீர்வாதம் தான் கிறிஸ்து சபைக்கு கொடுத்துள்ளார்." பின்பற்று". அதில் ரெண்டத்தனையான உவமை உள்ளதாக இருக்கிறது. அது...............அதில், இந்தப் பக்கமாக உள்ளதை சற்று, இந்த இரவுக்கு எடுக்கிறேன். ஆனால் கவனியுங்கள், அவர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் சென்ற கட்டங்கள் தான் அவர்களுடைய பிரயாணத்தின் கட்டங்களாகும். சபை இருண்ட காலங்களில் இருந்து வரும்போது, இருண்ட காலங்களிலிருந்து வெளியே வரும் போது, பிரயாணத்தின் முதல் கட்டம் லூத்தரோடு இருந்தது, அது கில்கால். இரண்டாம் கட்டம் மெதடிஸ்ட் காலமாக இருந்தது. அது ஜான் வெஸ்லியின் யுகம், மெதடிஸ்ட் சபை அந்த யுகம் மகா பெரிய இரண்டாம் சீர்திருத்தமாக இருந்தது. 31. இப்போது மூன்றாம் கட்டம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சபை இன்னும் எலியாவை பின்பற்றின எலிசாவை பின்பற்றிக் கொண்டிருக்கிறது. மற்றும் அவன் யோர்தானுக்கு செல்ல......கீழே இறங்கி சென்றான். யோர்தான் என்பதற்கு பிரிவு அல்லது அல்லது மரணம் என்று அர்த்தம். நீங்கள் அநேக தரம் கேட்டிருப்பீர்கள் "அந்தக் குளிர்ந்த யோர்தானுக்கு நான் வரும்போது" யோர்தான் என்பது மரணமாகும். லூத்தர் யுகம் கடந்து சென்றது போல, மெதடிஸ்ட் யுகமும் கடந்து சென்று விட்டது, ஆனால் நாம் மற்றும் ஒரு யுகத்துக்கு இப்பொழுது வந்திருக்கிறோம். "மரணித்து கொண்டு இருக்கும்" யுகம். உன்னுடைய உலகப் பிரகாரமான எல்லா லௌகீக வாழ்க்கையும். பரிசுத்த ஆவியை உங்களுக்கு கொடுப்பதற்கு முன்னால், தேவன் உங்களோடு ஏதாவது ஒரு காரியம் செய்தாக வேண்டும். அவன் இதை செய்யவேண்டும்......கண்டிப்பாக மரிக்கவேண்டும். மரித்துவிடு. நீ மரிக்கவில்லை என்றால் உன்னால் முடியாது........உனக்கு ஞாபகம் இருக்கிறதா, மரிப்பதினால் தான் ஜீவன் வெளியே வரும். ஒரு விதை மரிக்க மட்டும் தான் செய்ய முடியும். எதுவானாலும் மரிக்க மட்டும் தான் செய்ய முடியும். அந்த மரணத்திலிருந்து ஜீவன் வெளிப்படும். கிறிஸ்துவின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலின் ஜீவன் வந்தது. இந்த இரவு ஒரே ஒரு வழி தான் உண்டு, கர்த்தர் மேல் வைத்திருக்கும் விசுவாசமானதை உயிரோடே வைத்திருக்க வேண்டும் என்றால் நீ உனக்கே மரித்தாக வேண்டும், உன்னை சுற்றி இருக்கின்ற எல்லாவற்றிலிருந்து மரித்து மற்றும் உயிரோடு இருப்பதற்கு நீ உனக்கே மரித்தாக வேண்டும். மரித்துவிடு, எல்லா அறிகுறிகளுக்கும் மரித்து விடு, எல்லா சூழ்நிலைகளுக்கும் மரித்துவிடு, எல்லாவற்றிற்காகவும் மரித்து, மற்றும் கிறிஸ்துவுக்காக உயிரோட இரு. 32. இப்போது, அவர்கள் யோர்தானுக்கு அருகில் வரும் போது, அதை கடப்பதற்காக நேரம் வந்த பிறகு அவர் வழியை உண்டாக்கினார். பின் அதை கடந்த உடன் (இந்த கட்டம், பரிசுத்த ஆவியின் சபை) சொன்னார், இப்போது நான் உம்மிடம் ஒன்றை பற்றி கேட்கவிருக்கிறேன், "ஆகையால் உனக்கு என்ன வேண்டும்" அவன் சொன்னான் "உம்முடைய ஆவியை இரண்டு மடங்காக என் மேல் வரவேண்டும். "அப்படி தான் கேட்க வேண்டும், நீ பயப்படக்கூடாது, முழுமையானவற்றிற்காக கேட்க வேண்டும். இயேசு சொன்னார் "நீங்கள் அதை செய்யவில்லை, காரணம் நீங்கள் நம்பி அதை கேட்கவில்லை. உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும் படி முழுமையாக கேளுங்கள். "முற்றிலும் முழுமையாக கேளுங்கள். "கர்த்தாவே என்னை கொஞ்சம் நலமாக இருக்கும்படி செய்யும் என்று கேட்காதீர்கள், என்னை முற்றிலுமாக நலமுடன் வையும். "எனக்கு போதும் என்ற அளவுக்கு பக்தியை தர வேண்டாம், அது என்னை பயங்கரமாக மோசம்போக்கும். பாவத்திற்கு மரித்து கிறிஸ்துவுக்குள் ஜீவிக்க உதவி செய்யும். அது சரி தானே. 33. அப்படியே எனக்கு செய்ய வேண்டாம், நான் பின் தங்கி என் தலையை எப்பவாவது ஒரு முறை கவிழ்ந்து இருப்பேன். நான் உரக்க சத்தம் இடும்படி செய்யும். எனது வாயை திறந்து பாடும்படி, மற்றும் ஸ்தோத்திரங்களை உரக்க சத்தமாய் தேவனுக்கு சொல்லும்படி, என்னை அப்படி செய்யும். அந்த முழுமையானவற்றை எனக்கு தாரும். எனக்கு ஞானஸ்நானத்தை தாரும். என்னை சுற்றி ஜனங்கள் இருக்கும் போது, உலகத்தினுடைய காரியங்களுக்கு நான் மரிக்க எனக்கு அருள் செய்யும். நான் சபைக்கு செல்லும்போது உம்மை நான் தொழுது கொள்ள வேண்டும். அது சரிதானே. யார் என்ன நினைக்கிறார்களோ அது ஒரு பொருட்டல்ல, என்னை கொன்றே போட்டுவிடு. இன்று இரவு அதுதான் நமக்குத் தேவைப்படுகிறது, அந்த யோர்தானின் அனுபவம், அது சரிதானே? நம்மில் அனேகர் அந்த தீர்க்கதரிசிகளின் பள்ளியில் உள்ளவர்களை போல் தான் இருக்கிறோம். மறுபக்கத்தில் உள்ள மலையின் மீது நின்று, கடக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த இரவு அந்த ஆற்றை கடப்போம் வாருங்கள். நீங்கள் சொல்கிறீர்கள் "நல்லது செல்வி, இன்னார் மற்றும் இன்னார் புற்று நோயிலிருந்து சுகம் பெற்றார், திரு இன்னார் மற்றும் இன்னார் சக்கர நாற்காலியில் இருந்தார், அவர் நடக்கிறார். "உன்னைப் பற்றி என்ன? இன்று இரவு அதை கடப்போம். ஆமென். 34. மற்றும் அதை கடந்த பிறகு அவன் சொன்னான் "இப்போது நீ என்னிடம் ஒரு கடினமான காரியத்தை கேட்கிறாய். ஆனால், நான் செல்வதை நீ பார்ப்பாய் என்றால் நிச்சயமாக உனக்கு அது கிடைக்கும்." ஒரு ஒற்றைக் கண்ணனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அதுதான் இன்றிரவு. இன்றைய கிறிஸ்தவர்களிடம் உள்ள பிரச்சனை அவர்களுடைய ஒரு கண் கிறிஸ்துவின் மேலேயும், மற்றும் ஒரு கண் உலகத்தின் மேலேயும் உள்ளது. அந்தக் காரணத்தினால் நாம் எதையும் செய்ய முடிவதில்லை. எலியாவின் ஒவ்வொரு அசைவையும் எலிசா பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். ஒரு ஆசீர்வாதம் அவனுக்கு கிடைக்கும் என்றால் அது அந்த ஒரே வழியில் தான் கிடைக்கும். அவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்து, அவனுடைய கண்களை அவன் மீது வைத்திருந்தான். கிறிஸ்து மேலேயே உங்கள் கண்களை வைத்திருங்கள். நான் எவ்வளவு சுகவீனமாய் இருக்கிறேன், அல்லது டாக்டர் இப்படி சொன்னாரே என்றும் நீங்கள் பார்க்காதீர்கள். கிறிஸ்து என்ன சொன்னாரோ அதை பாருங்கள். உங்கள் கண்களை சரியாக அங்கேயே வையுங்கள். அவர் என்ன சொன்னாரோ அதை நம்புங்கள் அவருடைய வார்த்தை உண்மையாய் உள்ளது. 35. உங்களுடைய கண்களை அங்கே வையுங்கள். அவர் சொன்னார் "இப்போது நான் செல்லும் போது நீ என்னை பார்த்தால்" என்ன, அவன் நடந்து கொண்டே அவனை கவனித்தான். அவனையே கவனித்துக்கொண்டு அதற்குப்பிறகு முதலாவதாக என்ன நடந்தது என்று தெரியுமா, பரலோகத்தில் இருந்து ஒரு ரதம் வந்தது, அக்கினி மயமான குதிரைகள் எலியாவை மேலே எடுத்துக்கொண்டது. மற்றும் அவன் மேலே செல்லும் போது, அவருடைய சால்வையை கழற்றி, கடலையோ அல்லது ஆற்றை திறந்த அந்த சால்வையை கழற்றி கீழே விழும்படி செய்தான். மற்றும் எலிசா அதை பெற்றுக்கொண்டான். சபைக்கு அது ஒரு அழகான மாதிரி. இயேசு இந்த உலகத்தில் இருக்கும் போது, அநேக அற்புதங்களையும் பெரிய காரியங்களையும் செய்தார். ஆனால்.......எலிசாவுக்கு இரண்டத் தனையான எலியாவின் ஆவி இருந்தது. எலியா 8 அற்புதங்களை செய்தார். அற்றம் எலிசா பதினாறு அற்புதங்களை செய்தார், இரண்டத்தனையான பங்கு. சபையின் பரிபூரணம். 36. ஒருமுறை, இயேசுவிடம் "உம்முடைய ராஜ்யத்தில் என்னுடைய மகன்களில் ஒருவன் வலப்புறத்திலும் மற்றொருவன் இடபுறத்திலும் உட்கார வேண்டும் என்று கேட்டார்கள்" அவர் சொன்னார் "நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் பானம் பண்ணுவீர்களா? அவள் " ஆம்" என்று சொன்னாள். அவர் சொன்னார் " நான் ஞானஸ்நானம் எடுத்ததை போல நீயும் ஞானஸ்நானம் எடுப்பாயோ? அவள் " ஆம் " என்று சொன்னாள். இயேசு சொன்னார் "நீ அதை செய்ய முடியும். ஆனால் இடது புறத்திலும் வலது புறத்திலும் யார் இருப்பார்கள் என்பது எனக்கு உரியது அல்ல." ஆகையால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கிறிஸ்து மேலே இருந்தது. பெந்தேகோஸ்தே நாளில் அந்த மேல்வீட்டு அறையில் 120 பேர் இருக்கையில், அவர்கள் கண்கள் நேரே பரலோகத்தை பார்த்துக் கொண்டிருந்தன. மற்றும் அவர் பரிசுத்த ஆவி என்னும் அந்த சால்வையை கீழே வீசும் போது அவள் ரெண்டத்தனையாய் தேவனின் ஆவியை பெற்றுக் கொண்டார்கள். 37. " நான் என் பிதாவினிடதிற்கு செல்கின்றேன், நான் செய்கின்ற இந்த காரியங்களை காட்டிலும் பெரிய காரியங்களை செய்வீர்கள்" மற்றும் ஜீவனுள்ள தேவனுடைய சபையானது, தான் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளதாக கோரி, இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள அதே ஆவி, அவருடைய சுத்திகரிப்பின் பாத்திரத்தின் ஓரத்திலுள்ள ஆசீர்வாதங்களை முத்தமிட்டதாக கோரும். அது, அவருடைய வல்லமை அசைவாடி கொண்டிருக்கும். இந்த சமயத்தில் எப்படி அசைவில்லாமல் உட்கார்ந்துக் கொண்டிருக்க முடியும் என்பதை குறித்து ஆச்சரியப்படுகிறேன். ஓ, என்ன. நான் ஆச்சரியப்படுகிறேன், ஏன் நமக்கு அந்த சால்வையை எடுத்துக்கொண்டு இயேசு கிறிஸ்துவை வெற்றி மேல் வெற்றி சிறக்க செய்த அந்த ஆண்டவர் எங்கே? என்று ஏன் சொல்லமுடியாது. ஆமென். ஆமாம் ஐயா. இதோ இங்கே ஒரு மனிதனிடம் இரண்டு பங்கு உள்ளது. "வாரும், நாம் போய் அவரை பார்க்கலாம்". என்று சொன்னார். அதுதான் இப்போதைய உள்ள உலகத்தின் காரியமாகும். அவர்கள் குஷ்டரோகம் பிடித்தவர்கள் மற்றும் எல்லாவற்றையும் உடையவர்கள். அவர்கள் ஏதாவது ஒரு இடத்திற்கு வரவேண்டும் மற்றும் கர்த்தர் ரெண்டத்தனையான பங்குடைய அவருடைய சபை பிரகாசிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் மரக்காளுக்கு மேல் கூடைகளை அதன் வைப்பார்கள். ஆனால் அதை அப்புறப்படுத்தி மீண்டும் பிரகாசியுங்கள். அது சரிதானே. அவனோடு சரிக்கு சரியாக நில்லுங்கள். உங்கள் பக்கம் தேவன் இருக்கிறார். ஆகையால் யார் உங்களுக்கு எதிர்த்து நிற்பான். 38. "நாம் கீழே சென்று இந்த மனிதன் எலிசாவை பார்ப்போம்" என்று சொன்னார். ஆகையால் அவர்கள் கீழே சென்றனர் மற்றும்.........ஆகாப்பின் மகன் யோராம் அங்கு வருவதை பார்த்தான். அவனுக்கு பயங்கர கோபம் வந்தது. ஆர்மீனிய மக்களே, அது உங்களுக்கு கொஞ்சம் கடினமாக தோன்றும், ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், அந்த தீர்க்கதரிசிக்கு கூட கொஞ்சம் கோபம் வந்தது, அது அப்படித்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? அவனுக்கு சிலிர்த்து விட்டது. அநீதிக்கு ஏற்பட்ட அவனது கோபம் நீதியானது என்று தோன்றவில்லையா? எப்படியாயினும் அங்கே ஏதோ ஒரு சண்டை ஏற்பட்டது. அங்கே வெளியே சென்று சொன்னான், "யோசபாத்தின் பிரசன்னம் மட்டும் அங்கே இல்லாமல் இருந்திருந்தால்", அவன் முதலாவது யோராமிடம் "உன்னுடைய தாயினுடைய கடவுளிடம் நீ போகலாம் அல்லவா? உன் தாயினுடைய தீர்க்கதரிசி பாலாமிடமும் உன் தகப்பனுடைய தீர்க்கதரிசிகளிடமும், மற்றும் அதுபோல உள்ளவர்களிடதிற்கு போகலாம் அல்லவா? எதற்கு என்னிடம் வந்தாய்? திரும்பி உன் வழியாய் போ" என்று சொன்னான். அவன் சொன்னான் அப்படி அல்ல கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக் கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றார்." அவர், "நான் யூதாவின் ராஜாவாகிய யோசசபாத்தின் முகத்தை பாராமல் இருந்தால் நான் நோக்கவும் மாட்டேன் உம்மை பார்க்கவும் மாட்டேன் என்று சொன்னார்”. 39. அங்கு தான் அவன். இங்கே ஏதோ ஒரு காரியத்தை சொல்ல நான் விரும்புகிறேன் ஆனால் அதை சொல்லாமல் இருந்து தக்க வைப்பது நல்லது. அது சரி. "நான் யோசபத்துக்கு மட்டும் மரியாதை செலுத்தாமல் இருந்தால்" அவர் சொன்னார் "உன்னை நான் பார்க்க கூட மாட்டேன்". இப்போது அவருக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று, அவர் மிகுந்த கோபத்துடன் "இப்போது அடுத்து.......ஆனால் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்." சில நாட்களுக்கு முன்பாக, சபையில், இசையை விரும்பாத ஒரு மனிதனிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்னிடம் அவன் வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருந்தான். அவன் "ஓ, இசை உலகத்துக்கு உரியது " என்று சொன்னான். நான் சொன்னேன் "அந்த சுரமண்டல வாத்தியத்திலிருந்து, ஒரு பழைய பானியிலான பரிசுத்த ஆவியின் பாடல் ஒன்று பாடும் வரைக்கும் கர்த்தருடைய ஆவி அந்த கோபமாய் இருந்த தீர்க்கதரிசியின் மேல் வரவில்லை. மற்றும் கர்த்தருடைய ஆவி அந்த தீர்க்கதரிசியின் மேல் வந்தது." அது சரிதானே. கர்த்தர் மாறுவதில்லை. அப்பொழுது இசையை விரும்பியிருந்தார் என்றால், கர்த்தர் இன்றைக்கும் இசையை விரும்புகிறார். ஆமாம் ஐயா. 40. அவர் அந்தப் பாடலை பாட ஆரம்பித்தார்..........அவர்கள் அந்த நாட்களில் என்ன வாசித்தார்கள் என்பதை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் ஒரு பழைய மாதிரியான இதுபோல ஒரு பாடலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆகாயத்தில் ஒரு கூடுகை இருக்கப் போகிறது. இன்பராய் ஈற்றிலே தேவகுமாரன் தான் முன்செல்பவர் ஆகாயத்தில் அந்தக் கூடுகை இருக்கும் போது. ஏதோ ஒன்று அது போல, அந்தப் பழைய மாதிரியான பரிசுத்த ஆவியின் பாடல்கள். மற்றும் கர்த்தருடைய ஆவி அந்த தீர்க்கதரிசியின் மீது வந்தது. நான் சொல்கிறேன் சகோதரனே, நம்முடைய எல்லா முறைசார்ந்த கட்டுகள் அசைக்கப்பட்டு கீழே விழும்போது, கர்த்தருடைய ஆவி அந்தப் பாடலில் மீண்டும் இருக்கும் போது, மற்றும் தேவனுடைய ஆவி அசைவாடிக் கொண்டிருக்கும் அந்த பழைய இடத்திற்கு செல்வோமானால், அப்போது அந்தக் தீர்க்கதரிசிக்கு ஒரு தரிசனம் வெளிப்படும் அப்பொழுது கர்த்தருடைய ஆவி சபையின் மீது வரும். அப்பொழுது தெய்வீக சுகம் பெறுவதை காண்பார்கள். அதற்குப் பின் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பார்க்கமுடியும். அப்பொழுது அவர்கள் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை பார்க்கமுடியும். 41. நல்லது நீங்கள் சொல்லலாம், "சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல, "நல்லது நீ ஒரு தீர்க்கதரிசியாய் இல்லாமல் போனால், எப்படியாயினும் ஒரு இசைக்கருவியாக இருக்கலாம். சற்று வாசித்துகொண்டிருங்கள். அது சரிதானே, பத்துக்கு மேல் உங்களிடம் இல்லை. உங்களால் இயன்ற வரைக்கும் அவைகளுக்கு சற்று வெளியேற்றம் கொடுங்கள். உங்களால் ஒரு தீர்க்கதரிசியா இருக்க முடியாமல் போனால் சுரமண்டலத்தின் ஒரு பகுதியாக இருங்கள். தேவனுடைய ஆவியை கீழே இறக்கும்படியாக ஏதாவது ஒரு காரியத்தை செய்யுங்கள். ஆமென். தீர்க்கதரிசிக்கு தன்னால அதை செய்ய முடியவில்லை அவருக்கு உதவி செய்ய சுரமண்டலம் தேவைப்பட்டது. ஆகையால் அதை தொடங்க ஆரம்பித்தது............ எல்லாரும்...........அது எப்படி என்று நீங்கள் பார்ப்பீர்கள். தீர்க்கதரிசியும் ஜனங்களும் ஒன்றாக இணைந்து தேவனோடு ஒன்றாய் இசைந்திருக்கும் போது, தீர்க்கதரிசிக்கு காரியங்கள் தென்பட்டது. இப்போது சகோதரனே தெய்வீக சுகம் அளிப்பதை நீங்கள் பார்க்காமல் போனால் நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பார்க்க முடியாது, இந்த கடைசி கட்டத்தில் அசைவாடிக் கொண்டிருகிற வல்லமையுள்ள தேவனின் பரிசுத்த ஆவியின் அசைவை இங்கே காண முடியாது. ஆவிக்குள்ளாக ஒரு முறை மட்டும் நீங்கள் சென்று பாருங்கள், காரியங்கள், வெளிப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். காரியங்கள் இருப்பதை பார்க்கிலும் வித்தியாசமாக தென்படுவதை நீங்கள் பார்க்க ஆரம்பிப்பீர்கள். அது சரிதானே. நீங்கள் ஒரு குற்றம் கண்டுபிடிக்கும், ஆவியோடு செல்ல மாட்டீர்கள். நீங்கள் தாழ்மையோடு திரும்பி வருவீர்கள். அது சரிதானே. ஓ என்னே நான் இந்த இரவு பக்தி பரவசபடுகிறேன். 42. கவனியுங்கள் நான் அதை யோசித்துக் கொண்டிருந்தபோது, ஓ காரியங்களை காண தொடங்கினேன். இப்போது அவன் என்ன சொன்னான் என்று கவனியுங்கள். முடிப்பதற்கு நேரம் ஆகிவிட்டது. நான் துரிதப்படுகிறேன். அவன் என்ன சொன்னான் என்று கவனியுங்கள். அவன் சொன்னான் "இப்போது, அங்கே செல்லுங்கள், நீங்கள் ஒரு காற்றினோசையை கூட கேட்க மாட்டீர்கள். மற்றும் நீங்கள் இங்கே ஒரு துளி கூட மழை வருவதை பார்க்க மாட்டீர்கள்."நடந்தது, ஒரு காட்சியை கண்டேன். பாருங்கள்? நீங்கள் மழையே பார்க்கமாட்டீர்கள், காற்றின் ஓசையும் கேட்கமாட்டீர்கள். ஆனால் தண்ணீர் அங்கு வரும். இப்போது இன்றிரவு நீங்கள் அங்கு கீழே சென்று சுற்றிவர குழிகளை வெட்டவேண்டும். "கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாத அந்த எரிகிற பாலைவனத்திலேயே வெட்டவேண்டும்." அதை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? "ஒருவர் சொன்னார் "கேளித்தனமாக உள்ளது". கர்த்தருடைய வார்த்தை அதை செய் என்று எதுவரைக்கும் சொல்லுகிறதோ அதுவரைக்கும் தோண்டிக் கொண்டே இருங்கள். அது சரிதானே. நல்லது, அந்த மருத்துவர் சொன்னார், "அதற்கு அவசியம் இல்லை. "பரவாயில்லை தோண்டிக் கொண்டே இருங்கள். ஓ கர்த்தர் அதை செய்ய சொன்னார். மற்றும் நினைவில் கொள்ளுங்கள், அங்கே யாரோ ஒருவர் தோண்டிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். மேலும் ஏதோ ஒன்றின் மீது முட்டுவது போல உணர்ந்து சொல்கிறான். "ஓ, என்ன! மரக்கட்டை போன்ற தடை மீது இடித்து விட்டேன்." என்று. அந்த மர்க்கட்டையை தூக்கி வீசுங்கள். அனேக நேரங்களில் நீங்கள் தோண்டும் போது, அந்த பக்கத்துவீட்டு ஆளோடு இடித்து விடுவீர்கள், அவர் சொல்வார். "தெய்வீக சுகமளிப்பது என்று ஒன்று கிடையவே கிடையாது. அதை தூர வீசுங்கள் என்று. தோண்டிக் கொண்டே இருங்கள். அது சரிதானே. அதே மாதிரி தான் உங்கள் போதகரை எப்போதாவது இடித்து விடுவீர்கள். அவர் சொல்வார் "அந்த பரிசுத்த உருளைகளின் கூட்டத்தோடு முட்டாள்தனமாக நான் சேரமாட்டேன்." அவரை தூக்கி வீசி, தோண்டிக்கொண்டே இருங்கள். அது சரிதானே. அவரை கடந்து தோண்டிக்கொண்டே இருங்கள். 43. சகோதரனே ஞாகம் கொள்ளுங்கள், நீங்கள் அதிக ஆழமாக தோண்ட, தோண்ட, அதிக தண்ணீர் கிடைக்கும். அது சரிதானே. ஆழமில்லாதது எதுவுமே நமக்கு வேண்டாம். கர்த்தர் நமக்கு வைத்திருக்கும் எல்லாவற்றையும், அவர் உயிர்த்தெழுந்த வல்லமையும் நமக்கு தேவை. ஆமாம் ஐயா. நாங்கள் தோண்டிகொண்டே இருப்போம். ஓ, என்னே. உங்கள் சகோதரி, அம்மா, யாராயிருந்தாலும் அவர்களோடு முட்டுவீர்கள். அவர்களை அப்படியே தூர வீசுங்கள். தோண்டிக் கொண்டே இருங்கள். ஒரு பெரிய ஆழமான குழி கிடைக்கும் வரைக்கும் தோண்டிக் கொண்டே இருங்கள். காரணம் ஆழமாக தோண்ட தோண்ட அதிக தண்ணீர் கிடைக்கும். ஓ, என்ன, பகல் வெளிச்சத்தை பற்றி.........அல்லேலூயா! வனாந்திரத்திலிருந்து தண்ணீர் வரும். ஏன்? எங்கிருந்து அந்த தண்ணீர் வரும் உபதேசியாரே? எனக்கு தெரியாது. மழை பெய்ந்ததா? இல்லை. ஆனால் நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இஸ்ரவேலர்கள் அந்த வனாந்திர வழியாக தான் சில வருடங்களுக்கு முன்பாக கடந்து சென்றனர். வனாந்தரத்தில் அடித்த அந்த கன்மலை இன்னும் அங்குதான் இருந்தது. அந்த தீர்க்கதரிசியின் கண்கள். அல்லேலூயா! நான் சொல்கின்றேன், அந்த கன்மலை இந்த இரவில் கூட இன்னும் அங்கேயே தான் இருக்கிறது. அது சரிதானே? சற்று தோண்டிக் கொண்டே இருங்கள், மற்றும் அந்த குழி நிரம்பாமல் இருக்கிறதா என்று பாருங்கள். உங்கள் வழியிலிருந்து உலகத்தை அப்புறப்படுத்துங்கள். அந்த பழைய படக்காட்சிகளையும் மற்றும் நாட்டு புற நடனங்களிலிருந்தும், நீங்கள் பழக்கப்பட்ட காரியங்கள், மேலும் மற்ற எல்லா காரியங்களையும் எடுத்து தூர வீசுங்கள். தண்ணீர் உள்ளே வர அனுமதியுங்கள். கர்த்தருக்கு முதல் இடத்தை கொடுங்கள். ஆமென். கோணலானவைகளை நேர்ப்படுத்துங்கள். அப்புறம் அந்த தண்ணீர் எதோமின் வழியாக கீழே வரலாம். அது சரிதானே. 44. மேலும், உங்களுக்கு முதல் காரியம் என்னவென்று தெரியுமா, மறுபக்கத்தில் உள்ள மற்றவர்கள் பின்னோக்கி பார்த்து சொல்வார்கள். "ஏன், கீழே ஏதோ கொல்லப்பட்டு இருக்கிறது, இரத்தம் போல தெரிகிறது." ஆகையால் கீழே அவர்கள் சென்றார்கள். மற்றும் அவர்கள் எதிர்க்கப்பட்டதின் நிமித்தம் எழுந்து அவர்கள் எல்லோரையும் சுவரோடே அடித்தார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். ஒவ்வொரு பட்டணத்தையும், தீ கொளுத்தி மற்றும் ஒவ்வொரு கிணற்றையும் நிறுத்தினாரகள். அவர்கள் ஒவ்வொரு மரத்தையும் வெட்டினார்கள். அவர்கள்........ நிரப்பினார்கள். அவர்கள் அந்த இடத்தையும் கிழித்து போட்டார்கள். மற்றும் சகோதரனே, இன்றிரவு உங்கள் முழு இருதயத்துடன் தோண்ட ஆரம்பியுங்கள். உங்களால் முடிந்த வரை எல்லாவற்றையும் தோண்டுங்கள், மேலும் நீங்கள் தோண்டி, நகரத்திற்குள் நுழைந்தவுடன் அந்த பழைய அவ்விசுவாசிகள் இருக்கும் இடத்திற்கு சென்று கன்மலை போன்ற சாட்சியை கூறி அந்த பழைய தேங்கி நிற்கும் தண்ணீரை கொடுக்கும், குளிர்ந்த கடமைக்காக செயல்படும் கிணறுகளை நிறுத்துவோமாக. அது சரியா. அந்த பழைய தேங்கி நிற்கும் கூட்டம், "அற்புதத்தின் நாட்கள் கடந்து விட்டன." அந்த காரியங்கள் கோடி வருடங்கள் பழமையானவை. அது கடந்து செல்லட்டும். அப்படிப்பட்ட காரியம் ஒன்று இல்லவே இல்லை. மோசேயின் நாட்களில் உயிரோடிருந்த அதே தேவன் தான் இன்று ஜீவிக்கிறார். இயேசுவிற்குள் ஜீவித்த ஆண்டவர் இங்கே பரிசுத்தாவியை வைத்திருக்கிறார். மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த இயேசு இங்கிருக்கிறார். மற்றும் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாராதவராய் இருக்கிறார். ஆமேன். 45. நல்லது, கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. நான் நம்புகிறேன். ஒரு சுரமண்டலத்தைக் கொண்டு வாருங்கள். அவைகளை வாசிப்போம். தேவனை நம்பும் சில இருதயங்களை கொண்டு வாருங்கள். அந்த வீதி வழியாக மக்களால் நெருக்கபட்டிருக்கும் அவரை பார்த்து, அவரின் வஸ்திரத்தின் ஓரங்களையாகிலும் தொடுவதற்காக மலையின் மேலிருந்து இறங்கி வந்த அந்த ஸ்திரீயை போன்ற இருதயம் உள்ள சிலரை கொண்டு வாருங்கள். இன்றிரவு சுரமண்டலத்தின் ஒரு பகுதியாய் இருங்கள். அவர் திரும்பி பார்த்து சொன்னதை கவனியுங்கள் "யார் என்னை தொட்டது?" பாருங்கள்? அது சரிதானே? கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து கிருபையின் மேல் கிருபையை கூட்டுவாராக. அவ்வளவு நேரம் எடுத்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் கர்த்தர் உங்களோடு இருப்பாராக. நான் சற்று............நீங்கள் ஒரு அருமையான கூட்டத்தினர். நீங்கள் அந்த விதமாக துவங்கி எப்போது முடிப்பீர்கள் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் கர்த்தர் உங்களோடு இருந்து உதவி செய்வாராக. 46. எத்தனை பேர் இந்த இரவு, உங்கள் முழுமனதோடு அந்த வனாந்தரத்தில் இருந்த கன்மலை தான் இங்கு இங்கிருக்கிறது என்று நம்புகிறீர்கள். ஆமென். ஞாபகம் கொள்ளுங்கள், அந்த கன்மலையை அடித்தது மோசே தான். மற்றும் அவன் கையில் இருந்த கோல் நியாயத்தீர்பின் கோல். மற்றும் அது அந்த பக்கத்தில் அடித்த போது தண்ணீர் வந்தது. அது சரியாக யோவான் 3 : 16 ன் மாதிரி. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. அந்த வனாந்தரத்தில் இருந்த கன்மலை தான் அழிந்து போகின்ற மக்களை காப்பாற்றியது. ஒரு முறை அந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். அந்த படத்தை பார்த்தவுடன் அது அது என்னை மிகவும் களைப்பாக்கியது. ஒரு சிறிய ஓடையிலிறுந்து ஒரு சிறிய அடைப்பான் துவாரம் அளவிற்கு தண்ணீர் சொட்டியவாறு இருந்தது. நல்லது, அந்த கன்மலையிலிருந்து வந்த தண்ணீர் அப்படி வரவில்லை. நல்லது சகோதரனே 20 லட்சம் யூதர்கள் அங்கே இருந்தனர், அதுமட்டும் அன்றி ஒட்டகங்களும் மற்றும் காரியங்கள் இருந்தன.அவர்கள் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடித்தனர். அங்கு..........இருந்தது அது ஒரு நிமிடத்திற்கு பத்து லட்சம் காலன் தண்ணீரை வெளி ஏற்றும். அல்லேலூயா! அது போல தான் இயேசு வருவார், இங்கே ஒரு சொட்டும் அங்கே ஒரு சொட்டுமாக ஒரு பழைய சிறிய சொட்டாக வரமாட்டார். அவர் உன் ஆத்துமாவையும், இருதயத்தையும் நிரப்புகிறவர். அல்லேலூயா! நிற்கக்கூடியது ஒன்றும் அங்கு இல்லை. அது இயற்கையாகவே பல லட்ச காலன் தண்ணீரை வெளி ஏற்றும் இயந்திரத்தை திறந்து விட்டதை போன்றது. "என்னை விசுவாசிக்கிறவனுக்கோ நித்திய ஜீவன் உண்டு, மற்றும் நித்திய ஜீவனுக்கு செல்லும் நீர் ஊற்றுக்கள் போன்றது. நாம் ஜெபிக்கலாமா? 47. பரலோகத்தின் பிதாவே, வற்றாத நீரூற்றாக எங்கள் வாழ்கையில் இருக்கும் இயேசுவை எங்களுக்கு தந்ததற்காக உமக்கு நன்றி. அல்லேலூயா! இந்த இரவு அவரில் ஊன்ற பட்டதற்காக மிகுந்த சந்தோஷம். பேசுகிறோம், ஓ கர்த்தாவே, இந்த கடைசி காலத்தில் ஆவியின் கனிகள் வெளிப்பட்டு கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம், அதற்காக உமக்கு எப்படி நன்றி சொல்லுவது என்றே தெரியவில்லை. பதர்கள் வருவதை பார்க்கிறோம். அவர்கள் தங்கள் அத்தாட்சியை போடுவதை பார்க்கிறோம். ஆனால் சபையானது அதனுடைய அத்தாட்சியோடே வருவதை பார்க்கிறோம். ஜீவனுள்ள தேவனுடைய ஆலயத்திற்காக நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். தேவனே ஊசியினால் செய்யப்பட்ட தூய்மையான வெண் வஸ்திரத்தினால் அவளை உடுத்திவியும். அதனை அருள் செய்யும் கர்த்தாவே. அவளை ஒரு முன்மாதிரியாக வையும். அவளை பெலப்படுத்தும் கர்த்தாவே. இன்றிரவு பரிசுத்தாவி வந்து இங்குள்ள ஒவ்வொரு நபரையும் ஆட்கொள்ளும்படியாக செய்து அல்லது தொடர்ந்து, நான் சொல்ல போனால் ஜனங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தினால், பெரிய அதிசயங்களையும் அடையாளங்களையும் கர்த்தருடைய மகிமைக்காக கிடைக்கும்படி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமேன். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. 48. இப்போது, நான் உங்களுக்காக ஜெபிக்கும் போது நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். (ஓ நல்லது, அது அது சரிதான். எந்த அட்டையை நீ கொடுத்தாய்? ஓ? ஓ) ஜெப அட்டைகளை சிறிது நேரத்திற்கு இங்கு உள்ள சபை O அட்டைகளை கொடுத்தீர்களா? நமக்கு ஒரு..........இருக்கட்டும். எப்பொழுதுமே 15 நபர்களை கூப்பிடுவோம். எல்லோரையும் என்னால் கூப்பிடமுடியவில்லை. ஆனால் ஒருவேளை இன்றைய இரவு என்னால் முடியும். நான் முயற்சிக்கிறேன். முதல் பகுதியில் உள்ளவர்களை இன்று இரவு கூப்பிடலாம். O அட்டையில் உள்ள எண் 1 ஜெப அட்டை யாரிடம் உள்ளது என்று பாருங்கள்? கரங்களை உயர்த்துங்கள். சற்று துரிதமாக உங்கள் ஜெப அட்டையை பார்த்து நான் கூப்பிடும் போது, கரங்களை உயர்த்துங்கள். ஜெப அட்டை O எண் 1, கரங்களை உயர்த்துங்கள் O எண் 1? நன்றி பெண்மணியை, இங்கே சரியாகக் கீழே வாருங்கள். O எண் 2, யாரிடம் ஜெப அட்டை O எண் 2 உள்ளது? அங்கு, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்மணியா? எல்லாம் சரி, பெண்மணியே இங்கே வாருங்கள். எல்லாம் சரி O எண் 3? யாரிடம் ஜெப அட்டை O எண் 3 உள்ளது? யாரிடமாவது O எண் 3 உண்டென்றால் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? இந்த நபர் தானா? எல்லாம் சரி O எண் 4. யாரிடம் எண் 4 உள்ளது? பெண்மணியே நீங்கள் தானா? எல்லாம் சரி. எண் 5, யாரிடம் O எண் 5? எல்லாம் சரி, ஐயா. 49. எண் 6, யாரிடம் 6 உள்ளது? ஓ எண் 6? அட்டை 7? இப்போது யாராவது பாருங்கள், ஒரு வேலை பேச முடியாமல் இருக்கும் ஒரு இந்தியன் அல்லது ஸ்பானிஷ் நபராக இருக்கலாம். அதனால் தான் .......அல்லது காது கேளாமல் இருக்கலாம். ஓ இங்கே. நன்றி சகோதரி என்னை மன்னிக்கவும். எல்லாம் சரி வாருங்கள் இங்கே_ வாருங்கள். எல்லாம் சரி. எண் 7. 8, யாரிடம் ஜெப அட்டை 8 உள்ளது? O எண் 8? 8? எல்லாம் சரி. அது நல்லது. 9, 9, யாரிடம் ஜெப அட்டை 9 உள்ளது? O எண் 9? 10? 10? எல்லாம் சரி, பென்மணியே. 11? 11, ஜெப அட்டை11? 11? நன்றி. ஜெப அட்டை 12? ஜெப அட்டை12? யாரிடம் 12 உள்ளது? அவர்களை ஒருவர் பின் ஒருவராக நான் கூப்பிடுவதற்கு காரணம் என்னவென்று பாருங்கள் . எனக்கு இப்படியாக நிறைய கேட்கிறது, பின்னாலே வா என்று சொல்லிக் கொண்டு, அவர்கள் செவிடர் மற்றும் காது கேட்காது, அந்த......ஏதோவொன்று எழும்ப முடியாமல் இருக்கிறது. அவர்கள் நாற்காலியில் தான் அமர்ந்திருக்கிறார்கள், அல்லது அவர்கள்..............அல்லது ஆங்கிலம் பேச முடியவில்லையோ அல்லது வேறெதுவோ. எல்லாம் சரி. 12, யாரிடம் ஜெப அட்டை 12 உள்ளது? இங்கு இருக்கிறதா? O_12? 12? நன்றி. 13, ஜெப அட்டை 13, 13? வேறொருவருடைய அட்டையை பாருங்களேன்? அது ஒருவேளை அது அது செவிடராக இருக்கலாம் அல்லது பாருங்கள்.....சகோதரியே, இங்கிருக்கும் அந்த சிறுவனுக்கு ஜெப அட்டை கிடைத்ததா? அவளுக்கு ஜெப அட்டை கிடைக்கவில்லை. சற்று...,.....எல்லாம் சரி. அது பரவாயில்லை. இங்கிருக்கும் இந்த மனிதனை பாருங்கள். அவருக்குப் யாராவது உதவி செய்யவேண்டியது இருக்கிறது போல தோன்றுகிறது. அவருக்கு ஜெப அட்டை இருக்கிறது போல தெரியவில்லை. (வாங்குவதற்கு முயற்சி செய்யுங்கள். சரியா. என்ன சொல்வது? ஓ சரி.) ஸ்பேனிஷ் மொழியில் மொழிபெயரக்கும் மொழிபெயர்ப்பாளர் இங்கு இருக்கிறாரா? சற்று எழுந்திருக்கவும் மற்றும்.......ஸ்பானிஷ் மொழியில் சொல்வதற்கு இங்கு யாராவது உண்டென்றால், "O எண் 13" என்று சொல்லவும். ஓ, இங்கே ஒருவர் உண்டு. அது சரி. அல்லது அதுபோல யாராவது சொல்லுங்கள், அப்படியே சொல்லுங்கள். 50. எல்லாம் சரி, இந்தியன். யாராவது இந்திய மொழியை பேசமுடியுமா? செவ்விந்தியர் என்று நான் நினைக்கிறேன். அது தானே......?.....எல்லாம் சரி. 13? எல்லாம் சரி, 14 மற்றும் 15 type " எப்படி நாம் வரிசை படுத்துகிறோம்? அது போதுமா ?14, யாரிடம் 14 உண்டு. ஜெப அட்டை14 மற்றும் 15? எல்லாம் சரி. 15? எல்லாம் சரி. அது.......அவர்களுக்கு தேவை. நமக்கு ஒரு இந்திய மொழி பெயர்ப்பாளர் தேவை. செவ்விந்தியர் வார்தையை மொழி பெயர்க்க யாராவது உண்டா? ஏன், உங்களால் முடியும் என்றால் வரவும். மற்றும் ஒருவேளை.......ஸ்பானிஷ். நடத்துபவர்களும் மற்றவர்களும் அந்த மொழிபெயர்பாளரை அழைக்கின்றனர். .எல்லாம் சரி. உங்களுக்கு இப்போது, ஒன்று கிடைத்ததா.? உங்களுக்கு கிடைத்ததா__ உங்களுக்கு கிடைத்தது.........உங்களுக்கு......அவர்களுக்கு ஸ்பானிஷ் மொழியில் கிடைத்தது. சரியா. ஒரு இந்திய மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறது. ஆமென். இப்போது அவர்கள் எல்லாரும்......சரியாக இருக்கிறார்களா? ஆர்கன் வாசிப்பவர் எங்கே? சரியாக இங்கேதான் இருக்கிறார். இப்போது நாம் எல்லோரும் பயபக்தியாக இருப்போமாக . 51. மற்றும் இப்போது கிறிஸ்தவ நண்பர்களே, நீங்கள் எல்லாரும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உங்களுடைய சகோதரன், மற்றும் நான் நான் மற்ற எல்லாரை போலவும் தவறு செய்வதற்குட்பட்டவன், ஆனால் இப்போது அதை நியாயப்படுத்திக் கொள்ள...........இது ஒரு காலும் நாடக மேடையின் காட்சி அல்ல. இது ஒரு ஆவிக்குரிய கூட்டம். இங்கு தான் இயேசு கிறிஸ்துவை நாம் முழு மனதோடு, தெய்வீக வரத்தோடு, மற்றும் அவருடைய வார்த்தையோடு பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். அவருடைய வார்த்தை உண்மையுள்ளது. மற்றும் ஒருவேளை அவருடைய வார்த்தை உண்மை இல்லை என்றால் அப்போது அவர் இயேசு அல்ல. அவர் சர்வ வல்லமை உள்ள தேவன் என்றால் அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும் அது சரிதானே? மற்றும் அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியாமல் போனால், அப்பொழுது அவர் சர்வ வல்லமை உள்ள தேவன் அல்ல. அது உண்மைதானே? ஆகையால் எல்லோரும் பயபக்தியுடன் இருங்கள். ஜெபத்தில் இருங்கள். எல்லாரும் ஒரு மனதோடு இருங்கள். இப்போது இந்த அரங்கத்திலும், சுற்றி உள்ள இடங்களிலோ, ஜெப அட்டை இல்லாமல் இருந்தும், ஆனால் ஆண்டவரிடம் சுகம் பெற வேண்டுமென்று எத்தனை பேர் விரும்புகிரீர்கள், உங்கள் கரங்களை சற்று உயர்த்தி சொல்லுங்கள், "எனக்கு கர்த்தர் சுகம் தர வேண்டும்" நல்லது, அது எல்லா இடங்களிலும் பார்க்கிறேன். 52. இப்போது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு நபரை சொஸ்தமாக்க முடியும் என்றால், அவரால் எல்லோரையும் குணமாக்க முடியும். மற்றும் இப்போது ஒரே ஒரு காரியம் மட்டும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியது என்னவென்றால், அவர் பிரசன்னம் இங்கே இருக்கிறது என்பதை நம்ப வேண்டும். மேலும் அவர் இங்கே உங்களுக்கு உதவி செய்ய உள்ளார் என்பதை நம்ப வேண்டும். மற்றும் நீங்கள் அதை விசுவாசித்து அதை ஏற்றுக்கொண்டால், அவர் உங்களுக்கு உதவி செய்ய முடியும். மற்றும் நீங்கள் அதை செய்வீர்கள் என்றும், ஒவ்வொருவரும் பயபக்தியோட அவரை நம்பி உங்களுடைய முழ இருதயத்தோடும் அவரை விசுவாசிப்பீர்கள் என்பதை நான் இப்போது நம்புகிறேன். கர்த்தர் அவரை உங்களிடம் அனுப்பி உள்ளார். அவர் உங்களுடைய பாவங்களுக்காக மரித்தார். அவர் உங்களுடைய சுகவீனத்திற்காக மரித்தார். நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்களுடைய மருத்துவர் தங்களால் இயன்ற வரைக்கும் எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டனர். இனியும் ஏதாவது செய்ய முடியும் என்பது உங்கள் மருத்துவரால் கூடாத காரியம். மற்றும் ஒரே ஒருவரிடம் மட்டும் நீங்கள் நோக்கிப் பார்க்க முடியும் என்றால், அது இயேசு கிறிஸ்து மட்டும் தான். 53. இப்போது அவர் ஒரு வேளை உயிர்த்தெழுந்த சரீரத்தோடு இங்கே நின்று கொண்டு இருப்பார் என்றால் எப்படிப்பட்ட.........இந்த உலகத்தில் அவர் இருந்த போது அவர் என்ன செய்தார்? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருந்தால் எப்படிப்பட்ட வேலையை அவர் இந்த உலகத்தில் செய்தார்? அவர் தன்னை சுகம் அளிப்பவராக கோரவில்லை, அப்படி செய்தாரா? ஆனால் சுகமளிப்பதற்கு அந்த முழுத் தொகையையும் அவர் செலுத்தி விட்டார். அவர்தான் உங்களுடைய சுகத்திற்கு முழு தொகையும் செலுத்தி விட்டார். அது சரிதானா? உங்களுடைய மீறுதலினால் தான் உங்களுடைய சுகம் கிடைக்கப் பெறுகிறது. அது உண்மைதானே? பாருங்கள் பாவத்தின் ஒரு பண்பு தான் சுகவீனம். பாருங்கள்? பாவத்தின் ஒரு தன்மை தான் அது. பாவத்தினால் தான் சுகவீனம் ஆக்கப்படுகிறீர்கள். எந்த சுகவீனமும் இல்லாததற்கு முன்பு, எந்த பாவமும் இல்லை. சொல்லப் போனால் நமக்கு ஒரு வியாதியும் இல்லாமல் இருந்தது. பின்பு சுகவீனம் வந்த பிறகு...............பாவம் வந்த பிறகு, வியாதி தொடர்ந்து வர ஆரம்பித்தது. பாருங்கள். ஒருவேளை நீங்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்திருக்கலாம், ஆனால் உங்களுடைய ஜனங்களிடம் இருந்து ஏதோ ஒன்றை பெற்றுக் கொண்டீர்கள். பாருங்கள். 54. ஆகையால் தான், ஒவ்வொரு பாவத்துக்காக, ஒவ்வொரு முறையும் நாம் சரி செய்ய வேண்டும். பாவத்தோடும் சுகவீனத்தோடும் உங்களால் சரி செய்ய முடியவில்லை என்றால், உங்களால் முடியாது காரணம் அவர்-அவர் உங்களுடைய சுகத்திற்காக செய்த அதே பரிகாரம் தான். மற்றும் இப்போது அவர் இங்கே இருக்கும்போது அவர் _ அவர் உங்களுடைய சுகத்திற்காக தொகையை செலுத்தி விட்டார். ஆனால் அவர் பெரிய அற்புதங்களை செய்தார். அந்த அற்புதங்களை யார் செய்தார் என்று அவர் கூறினார்? அவருடைய பிதா, அது சரிதானே? அவர் அவருடைய பிதா அவருக்குள் இருந்தார் என்று சொன்னார். ஆனால் அவர் வெளிப்படும் காட்சிகளை கண்டார் என்று சொன்னார். ஜனங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று அவருக்கு தெரியும். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் என்ன செய்திருந்தார்கள் என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவரே சொல்கிறார் பிதா முதலாவது அவரிடம் ஒரு காட்சியில் காட்டாமல் அவர் தாமாகவே ஒன்றும் செய்யவில்லை என்று. அது சரிதானே? அதுதான்_ அதுதான் அவர் சொன்னார். மற்றும், அதற்குப் பிறகு அவர், நான் உயிர்தெழுந்த பிறகு "நான் என்ன செய்கிறேனா அது சபையும் செய்யும்" என்று சொன்னார். "அதை செய்வேன் என்று அவர் சொன்னாரா?" அப்போது அவர் செய்வேன் என்று............ அந்த வேத வாக்கியம் உண்மை என்றால், நமக்குத் தெரியும் அது உண்மை என்று, பிறகு இன்று இரவு அவர் அன்று இருந்ததைப் போலவே இருக்கிறார். அவர் நம்மோடு இருக்கிறார். மற்றும் அவர் தன்னையே மகிமையிலிருந்து இணங்கி கீழே வருவார் என்றால், மற்றும் இந்த ஆலயத்தில் அந்த தன்மையோடு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பாரானல் நீங்கள் எல்லாரும் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக மற்றும் சுகம் அளிப்பவராக ஏற்றுக்கொள்வீர்களா? அதை செய்வீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 55. இப்போது, அன்புள்ள தகப்பனே, இந்த காரியங்கள் எல்லாம் நடைபெறட்டும். உம்முடைய ஒன்றுக்கும் உதவாத ஏழை ஊழியன் மேல் இரக்கமாயிரும். மற்றும் இந்த நேரம் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, இங்கு கூடியிருக்கும் அநேக ஜனங்களுக்கு தெரிவிக்க சரியான நேரம் என்பதற்காக நான் ஜெபிக்கிறேன். பாவிகள் நியாய தீர்ப்புக்கு வரவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளட்டும். மற்றும், ஒருவேளை இந்த இரவு முடிவதற்கு முன், சரியாக இந்த கூட்டங்களிலே அவர்கள் இந்த கதவை விட்டு வெளியே போகக்கூடாது. ஒரு முடிவில்லாத சிறந்த நித்தியம் நமக்கு முன் இருப்பத்தை அறிந்து கர்த்தர் கிருபையாய் நம்மோடு இருப்பாராக. நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும் அறிவதற்காக, உம்முடைய ஊழியக்காரன் மூலமாக உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த இரவு வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இதை உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக கேட்கிறோம். ஆமென். 56. இப்போது, நாட்டின் சட்டம் சொல்கிறதைப் போல நான் இதை சொல்லுகிறேன். இங்கே யாராவது என்னை விமர்சிக்கிற வராகவோ அல்லது வித்தியாசமானவராக அல்லது தவறாக விமர்சிக்கிறவராக இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. காரணம் ஞாபகம் கொள்ளுங்கள் ஒருவேளை..............வியாதிகள் ஆவியாக இருப்பதால் மற்றும் அது ஒரு மனிதனை விட்டு வேறொரு மனிதனிடம் செல்லும். யாருக்காகிலும் தெரியுமா அது தான் வேதவாக்கியம் என்று அது சரிதானே? ஆகையால் ஒரு அவிசுவாசி என் மேல் எனக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. ஒரு விசுவாசியை நான் கட்டுபடுத்தலாம் ஆனால் ஒரு அவிசுவாசியுடன் அல்ல. ஆகையால் அது தெரிந்திருக்கக்கடவது. இப்பொழுதும், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இங்கிருக்கும் ஒவ்வொரு ஆவியையும் தேவனுடைய மகிமைக்காக என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறேன். 57. எப்படி இருக்கிறீர்கள் பெண்மணியே? யாருக்காவது தெரியுமா நம்ம இங்கு நின்று கொண்டிருக்கையில், நான்...........முற்படுவேன், நாமெல்லாரும் ஒருவரை ஒருவர் முன் பின் அறிந்ததில்லை. அப்படியா பெண்மணி? என் வாழ்க்கையில் நான் உங்களை பார்த்ததே இல்லை. நாம் ஒருவருக்கு ஒருவர் முற்றிலுமகாக அன்னியர் . ஆனால் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னை போல மாம்சத்தில் இங்கு நின்றுக் கொண்டிருப்பார் என்றால், உங்களுடைய பிரச்சனை என்னவென்று அவருக்கு தெரியும் அல்லது உங்களுக்கு என்ன வேண்டும் அல்லது இன்னும் என்ன, உங்களைப் பற்றி என்ன. அவருக்கு அவருக்கு தெரியும், அல்லவா? ஆனால் இப்போது, குணமாக்குவதற்கு அவர் சொல்வார், "நான் கல்வாரியில் அதை செய்து முடித்து விட்டேன்." ஆகையால் அவரால் அதை முடியும்..........அவர் இங்கே வந்து, மற்றும் அவருடைய ஊழியக்காரனாகிய என் மூலமாக பேசினால், அது அவருக்கு தெரியும். அதே தான் சொல்லுவார், அவரால் முடியாதா என்ன? அது அப்படியே.......ஒருவேளை என்னுடைய உதடுகள் அசையலாம் ஆனால் அது என்னுடைய சத்தம் பேசிக் கொண்டிருப்பதல்ல. அது வேறு ஏதோ ஒன்று. அது சரிதானே? 58. இப்போது உங்களுக்கு தெரியுமா.......நீங்கள் ஒரு கிறிஸ்தவர். நான் அதை பார்க்கிறேன். நீங்கள் ஒரு கிறிஸ்தவ விசுவாசி. மற்றும்...........ஆனால் இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது, அந்த கிணற்றண்டையில் நம் தேவன் அந்த ஸ்தீரீயிடம் பேசிக் கொண்டிருந்தது போல உள்ளது. நீங்கள் இதற்கு முன்னால் என்னுடைய கூட்டங்களில் இருந்திருக்கிறீர்களா? இரண்டு கூட்டங்களுக்கு முந்தைய கூட்டம். இந்த கூட்டம் தானா? ஓ, அப்படியா, அப்படியா. 8 வருடங்களுக்கு முன்னால் நான் இங்கு இருக்கும் போது நல்லது, அதின் பிறகு நீங்கள்.......அது ஒரு நல்ல சந்திப்பு. சகோதரி, உங்களிடம் நான் பேசிக்கொண்டு இருப்பதற்கு காரணம், ஏதோ ஒன்று சம்பவிக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அது தான், பரிசுத்த ஆவி. அது இல்லாமல் நான் மற்றவர்களை போல உதவியற்றிருப்பேன். ஆனால் எனக்கு கண்டிப்பாக அவருடைய ஆவியும், அபிஷேகமும் தேவை. நீங்கள் நிஜமாக, எனக்கு முன்பாக மிகவும் சிறிதாக காணப்படுகிறீர்கள். இயேசு கிறிஸ்து இங்கே நின்றுகொண்டு உங்களுடைய பிரச்சனை என்னவென்று எனக்கு அந்த கிணற்றன்டையில் நின்றுகொண்டிருந்த அந்த ஸ்திரீயை போல தெரிவிப்பாரானால் அவரே உங்களை சுகமாக்குபவர் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் ஒரு-ஒரு வித நரம்பு பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மிகுதியாக நரம்பு தளர்ச்சியால் கஷ்டப்படுகிறீர்கள் 59. அதற்கு பிற்பாடு நான்_நான் அங்கு நின்றுகொண்டிருக்கும் ஒரு மருத்துவரை பார்க்கிறேன். அது இருந்தது........அது.........உங்கள் கழுத்திலே ஏதோ ஒரு விதமான பிரச்சனை உள்ளது. ஒருவிதமான_ ஒரு _ ஒரு பிரச்சனை, அது ஒரு வீக்கம் போல உள்ளது அல்லது ஏதோ ஒன்று கழுத்து பகுதியில் நடக்கிறது. மற்றும் அந்த மருத்துவர் உங்கள் கழுத்து பகுதியில் ஏதோ செய்துள்ளார். அது ஒரு அறுவை சிகிச்சை. உங்கள் கழுத்தில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்துள்ளார். அது கோய்டர் என்று சொல்லக்கூடிய ஒரு வித கட்டி. ஆனால் அது பல வருடங்களுக்கு முன்னால், நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னால். நீங்கள் இப்போது இருக்கிறது போல நரைத்த முடியுடன் அல்ல. பிறகு நான்............உங்கள் உங்கள் கரங்களில் ஏதோ ஒன்று தவறாக உள்ளது. அது உங்கள் இடது கை, என்று நம்புகிறேன். அது சரிதானே? அது ஒரு எலும்பு. ஏதோ அந்த எலும்பில் தவறு உள்ளது. மருத்துவர்கள், சிகிச்சை செய்துக் கொண்டிருக்கின்றனர். அது.........இதுவாக இருக்கலாம் என்று யூகிக்கின்றனர். 60. அந்தக் காரியங்கள் உண்மையா? அவைகள் உண்மை. பிறகு அவர் என்பதை நம்புகிறீர்களா? அவர் இங்கு நின்று கொண்டு இருந்தார் மற்றும் அவருக்கு மட்டும் தான் அந்த காரியங்கள் தெரியும்? அது என்னுடைய...........என்னுடைய சத்தம் அல்ல அது அவர். மற்றும் ஒரு வேளை நான் ஜெபித்து அவரிடம் கேட்பேனானால், இப்போது நீங்கள் யோசித்து பாருங்கள், அவருடைய அபிஷேகம் இங்கு இருக்கும் பட்சத்தில் , நீங்கள் சுகம் அடைவீர்களா? இங்கே வாருங்கள். கருணை நிறைந்த எங்கள் பரலோகத்தின் பிதாவே, ஏதோ ஒரு நாள் நாங்கள் உம்மை சந்தித்து, எங்களுடைய வாழ்க்கைக்குரிய கணக்கை உம்மிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதை அறிந்து, உம்முடைய தெய்வீகப் பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கிறோம். மற்றும் உம்முடைய இரக்கத்திற்காக ஜெபிக்கிறோம். அன்புள்ள தேவனே இப்போது எங்கள் சகோதரியை ஆசீர்வதியும். மேலும் இங்கிருந்து செல்லும்போது சுகம் பெற்றவளாக செல்லட்டும். நான் கரங்களை அவள் மேலே வைத்து இரக்கத்திற்காக தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கும் போது, இன்று இரவு நல்ல சுகத்தை பெறட்டும். ஆமேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரி. இப்போ நீங்கள் போகலாம், கர்த்தர் உங்களோடு கூட இருப்பாராக. 61. இப்போது ஜெபத்தில் தரித்திருங்கள். சுகவீனமாய் இருக்கின்ற ஒவ்வொருவரையும் அவர் அறிவார். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவீர்களா? நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் நம்புகிரீர்களா? அப்படியே அவருடைய ஊழியக்காரனாக நான் இருப்பேன் என்றால், நல்லது எனக்கு _ எனக்கு உங்களுக்கு உதவி செய்ய முடியும். எனக்கு உங்களுக்கு உதவி செய்ய முடியும் என்றால் அது ஜெபத்தினால் மாத்திரம் தான். அது சரியா? உங்களுக்கு உதவி செய்ய ஒரே வழி........... ஒரு கணம், இங்கே பாருங்கள். உங்களுக்கு ஒரு வினோதமான காரியம் தவறாக உள்ளது......நீங்கள் ஏதோ ஒன்றை முகர்வதற்கு முயற்சிக்கிறதை நான் பார்க்கிறேன். அது.........நீங்கள்.... நீங்கள்.......நீங்கள் உங்கள் முகரும் உணர்ச்சியை இழந்து விட்டீர்கள். இதற்குமேல் உங்களால் ஒன்றும் முகர முடியாது, அது சரிதானா? இந்த இரவு இயேசு உங்களுக்கு கொடுப்பாரா? திரும்பவும் அளிப்பாரா? உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருக்கு சேவை செய்வீர்களா? இங்கே வாருங்கள். அன்புள்ள பரலோக பிதாவே, உம்முடைய நேசகுமாரன் இயேசுவின் நாமத்தில் இந்த சகோதரிக்கு அவர்கள் உடம்பில் இழந்துபோன இந்த முகரும் உணர்ச்சியை திரும்ப அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். முகருங்கள்? அவர்களுக்கு இப்போது முகர முடியும். நீங்கள் சுகமடைந்தீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 62. அவர் எல்லா வியாதியஸ்தரையும், பெலவீனரையும் சுகமாக்குகிறார். அவரால் கூடாதது.........எது _ அந்த வியாதியஸ்தர் எங்கே? இந்த மனிதனா? ஓ பேசமாட்டாரா?......வியாக்கியானம் செய்பவரே? இப்போது, இதோ இங்கே ஆங்கிலம் பேச முடியாத ஒரு மனிதன். இப்போது அவனுடைய உள்ளத்தில் இருப்பதை எப்படி என்னால் வாசிக்க முடியும். மற்றும் அவனுக்கு ஆங்கிலம் பேச முடியாது. நான் அவனிடம் சற்று நேரம் பேச போகிறேன். நீங்கள், எப்படி வெளிநாடுகளில் இது போன்று பேச முடியாமல்...... இருக்கும் அவர்களிடம் எப்படி நடக்கின்றது என்று நீங்கள் பார்க்கலாம். நீங்கள் _ நீங்கள் சற்று வியாக்கியானம் செய்யுங்கள். பார்க்காதீர்கள்......நீங்கள் பார்க்கவே பார்க்காதீர்கள். நீங்கள்_ நீங்கள் சற்று அவனிடம் நான் என்ன சொல்கிறேன் என்பதை கேளுங்கள். அவனுடைய ஆவியை நான் பிடிக்க வேண்டியதாயிருக்கிறது. பாருங்கள்? நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவனது வசுவாசத்தின் அறிக்கை அதுவே. ஒருவேளை......அதை....... நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் முன்னே பின்னே அறியாதவர்கள்? உங்களை எனக்கு தெரியாது. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருந்தார் என்றால் அவர் செய்ததையே அவருடைய ஊழியக்காரர்கள் செய்வார்கள் என்று வாக்களித்துள்ளார். நீ........ அப்போது என்னால் அதை இயேசு கிறிஸ்துவின் மூலமாக செய்ய முடியும் என்று நம்புகிறாயா? அவர் செய்கிறார். அவன் கழுத்தில் உள்ள அந்த பட்டி ஒரு புற்று நோயாகும். நீங்களும் ஒரு கத்தோலிக்கர் அல்லவா? உங்களுக்கு ஒரு மனைவி உண்டு அவர்களும் கத்தோலிக்கர். அவளும் ஒரு உள்ளார்ந்த பிரச்சனையினால் அவதிப்படுகிறார்கள். அது சரிதானா? அவள் இங்கேயே கீழே உட்கார்ந்து இருக்கிறாள். அவர் இப்பொழுது நம்புகிறாரா என்று கேளுங்கள்? அவர் நம்புகிறார். இங்கே வாருங்கள். 63. எங்களுடைய இரக்கமுள்ள பரலோகத்தின் பிதாவே, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவருடைய உயிரை எடுக்கும் இந்த பிசாசை கடிந்து கொள்கிறேன். மற்றும் அவரும், அவருடைய அன்பார்ந்தவர்களும் சந்தோஷமாக வயதாகும் வரைக்கும் வாழட்டும். அதை அவர்களுக்கு அருள் செய்யும் கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த வியாதியை நான் கடிந்து கொள்கிறேன். ஆமேன். அவரிடம் "விசுவாசிக்க மட்டும் செய்யும்" என்று கூறுங்கள். இப்போது நீங்கள் வியாக்கியானம் செய்பவர், உங்களுடைய.............நான் மிக்க நன்றி கூறுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களிடம் அன்பாக இருப்பதின் நிமித்தம், உங்களுடைய இருதயத்திலும் ஏதோ ஒன்றை நான் பார்க்கின்றேன். நீங்க சுவிசேஷத்தை பிரசங்கிப்பவர், அது சரிதானே? அது இந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த சிறு பெண் தான். அவள், அவள் உங்களுடைய உடன் பிறந்தவர்களின் மகள். மற்றும் அவளுக்கு ஆஸ்துமா வியாதி உண்டு. அது சரிதானே? தேவனுடைய தயவுக்காக வேண்டி அவள் மீது உங்கள் கரங்களை வைக்கவும்..?.... 64. தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள், உங்கள் முழு இருதயத்தோடு அதை நம்புங்கள். மற்றும் நீங்கள் தேவனுடைய மகிமையை காண்பீர்கள்......?........நீங்கள் நம்புவீர்கள் என்றால், விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும். தேவனிடத்தில் விசுவாசம் மட்டும் வையுங்கள். நான் பொறுமையோடு அந்த ஏழை சிறு பையனுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது இந்த கூட்டத்திலும் மற்றும் எல்லா இடத்திலும் உங்கள் முழு மனதோடு நம்புங்கள் அவர்........ என்னால் குணமாக்க முடியாது. நிச்சயமாக என்னால் முடியாது. நான் ஒரு மனிதன். ஆனால் தேவனுடைய ஆவி இங்கே இருக்கிறது, அவரை மட்டும் நம்புவீர்கள் என்றால். அவர் உங்களை குணமாக்குவார். பாருங்கள்? அவர் கண்டிப்பாக.....அவர் கண்டிப்பாக, நிச்சயமாக.........ஒரு மனிதன் உண்மையை சொன்னால் கர்த்தர் அந்த மனிதனைப் பற்றி பேச கடமைப்பட்டிருக்கிறார். மற்றும் அவர் சொன்னார் அவர் செய்வேன் என்று கர்த்தர் எபிரேயர் 11:2 இல் சொன்னார் "அவருடைய வரங்களை குறித்து சாட்சி பகிர்ந்தார் " 65. இப்போது, அந்த பெண்ணை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் உட்கார்ந்துக் கொண்டு அப்படியே உத்தமமாக பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் முழு மனதோடு விசுவாசியுங்கள்? நான் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருப்பேன் என்றால் உங்களுடைய வாழ்க்கையை பற்றி என்னிடம் மறைக்க முடியாது. அது சரிதானே? உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை உங்களுக்கு என்னால் வெளிப்படுத்த முடியும் என்றால் உங்களுடைய சுகத்தை பெற்றுக் கொள்வீர்களா? இருதய நோய். அது சரிதானே? எழும்பி நில்லுங்கள். இப்போது நீங்கள் வீட்டுக்கு செல்லலாம், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சுகமாய் இருங்கள். நீங்கள் நம்புவீர்களா? இப்போது எல்லா இடங்களிலும் பயபக்தியாய் இருங்கள். ஒருவேளை நீங்கள்...........நீங்கள் நம்பவீர்களா பெண்மணி? அந்த நீரிழிவு நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றிருக்கிரீர்கள்? கர்த்தர் உங்களை சுகமாக்கப் போகிறார் என்பதை நம்புங்கள். எழும்பி நில்லுங்கள். "நான் பெற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மற்றும், சென்று சுகமாகுங்கள். நான் நினைக்கிறேன், நாம் ஒருவரை ஒருவர் முன்ன பின்ன அறியாதவர்கள் என்று, அப்படித்தான் பெண்மணியே? உங்கள் முழு மனதோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்? நான் விசுவாசிப்பேன். மற்றும் நான் நீங்கள் என்னை நம்புகிறீர்கள் என்று நம்புகிறேன். ஏன் என்றால் உங்களுடைய.........ஆம் உங்களுடைய ஆவி நன்றாக வரவேற்கிறது. மற்றும் நான் நீங்கள் என்னை நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும். இப்போது நீங்கள் ஒரு விசுவாசியாய் இருந்தால், நாம் இருவரும் ஒருவரை ஒருவர் முன்ன பின்ன அறியாதவர்கள். ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். ஆனால் கர்த்தருக்கு நாம் இருவரையும் நன்றாக தெரியும். அவருக்கு தெரியும் அல்லவா? ஆமாம் அவர் நிச்சயமாக நம்ம இரண்டு பேரையும் அறிவார். உங்களுக்குப் யாரை பிரதிநிதி படுத்த முயற்சிக்கிறேனா அவர் இங்கே இருக்கிறார். இயேசு இங்கே இருப்பார் என்றால், இந்த மேடையில் நிற்பார் என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். நல்லது அவருக்கு உங்களை பற்றி எல்லாம் தெரியும். அவருக்கு, இந்த அரங்கத்தில் உள்ள கூட்டத்தார் எல்லாரை பற்றியும் தெரியும், ஏனென்றால் பிதா அவருக்கு தெரிவிப்பார். இரத்த சம்பந்தமான அந்த ஸ்திரீ வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டது போல. அவர் திரும்பிப் பார்த்தார். அதுதான் சில நிமிடங்களுக்கு முன்பாக இங்கே, இங்கே நடந்தது. ஏதோ ஒரு இடத்துல நடந்தது. 66. நீங்கள் இந்த வழியாக என்னை பார்த்து உங்கள் முழு மனதோடு நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மற்றும் மற்றும் கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக. ஏன் என்றால் நீங்கள் நின்று கொண்டிருக்கிற இடத்தை சுற்றி பயங்கரமான ஓர் இருள் இருக்கிறது. அவர் எனக்கு என்ன சொல்ல போகிறாரோ என்பதை அறிவதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன். காரணம் நீங்கள் மிகவும் சுகவீனமாக இருக்கிறீர்கள். 67. முதலாவது நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் இந்த பட்டணத்தை சேர்ந்தவர் அல்ல. நீங்கள் பர்கஸ் அல்லது பர்கான் அல்லது பர்கஸ் என்னும் இடத்தை சேர்ந்தவர். ஆமாம் அது "B" உடைய ஓசையை போல் இருந்தது. எல்லாம் சரி? நீங்கள் நாளைக்கு வீட்டுக்கு போவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேருந்து மூலமாகத்தான் செல்லப் போகின்றீர்கள் அது அப்படித்தானே? உங்கள் பெயர் ஜூலியா மேஜர்ஸ் அல்லது அது போன்று. அது சரிதான்? நீங்க ஹெர்னியா என்னும் நோயினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இடது புறம் குதிகால் கிட்ட ஏதோ பிரச்சினை உங்களுக்கு இருக்கிறது. அது ஒரு விதமான வளர்ச்சி அது சரிதானே? வெளியே தெரிவதில்லை. ஆனால் அது குதிகால் கிட்ட இருக்கிறது. ஒரு வெளிப்பாட்டில் நீங்கள் அதோடு என்னதோ செய்து கொண்டும், மற்றும் அதோடு கூட சென்று கொண்டே இருக்கிறீர்கள். மேலும் உங்களுக்கு வெரிகோஸ் வெயின் என்று சொல்லப்படும் வியாதியும் உங்கள் கால்களில் உண்டு? அது அப்படிதான். மற்றும் உங்களுக்கு உங்களுக்கு சிறுநீரக பிரச்சனையும், இருதய கோளாறும் உண்டு. உங்களுக்கு நுரையீரல் பிரச்சனையும் உண்டு. உங்களுக்கு பக்கவாதமும் உண்டு. வீட்டுக்கு செல்லுங்கள் சுகமாக இருங்கள். கர்த்தருடைய மகிமைக்காக சர்வ வல்லமையுள்ள தேவனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களுக்கு முற்றிலுமாக சுகத்தை தர வேண்டும் என்று கேட்கிறோம். கர்த்தரிடத்தில் விசுவாசம் வையுங்கள். சந்தேகப்படாதீர்கள். நம்பிக்கை வையுங்கள். எல்லாம் சரி 68. எப்படி இருக்கிறீர்கள் ஐயா? நாம் முன்ன பின்ன ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் என்பதாக யூகிக்கிறேன் ஐயா. எனக்கு உங்களைப் பற்றி ஒன்று தெரியாது மற்றும்........ஆனால் ஆனால் கர்த்தருக்கு உங்களைப் பற்றி தெரியும். அவருக்கு தெரியும் அல்லவா? ஒருவேளை ஆயிர வருட அரசாட்சியில் சந்திக்கும் வரை நமக்கு தெரியாது. சந்திப்பீர்களா? உங்களுக்கு புரிகிறதா, அல்லது இந்த அரங்கத்துக்குள்ளே என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை ஓ! உங்களுக்கு அதை காட்டவும், பார்க்கவும் வாஞ்சிக்கிறேன். எல்லா இடங்களிலும் இருக்கக்கூடிய எல்லா நிழல்களும் மங்கி போகும். இப்பவே இந்த கட்டடங்களை சுற்றி அது வளைந்து கொள்கிறது, அதே வெளிச்சம் சுற்றி அதனை வளைத்துகொண்டு நம் முழு கட்டிடத்தையும் இப்பொழுது சுற்றித் திரும்ப வருகிறது. நான் பேசிக்கொண்டிருக்கும் அவையினர் ஒரு.....லிருந்து வந்திருப்பவர் என்பதை உணருகிறேன். எல்லாம் சரி. நாம் முன்ன பின்ன அறியாதவர்கள். ஆனால் கர்த்தர் நம் இருவரையும் அறிந்திருக்கிறார். உங்களைப் பற்றி எனக்கு தெரியாது. என் வாழ்க்கையில் உங்களை பார்த்ததே கிடையாது. நித்தியத்தில் சந்திப்பதற்குள் இதுதான் கடைசி சந்திப்பாய் இருக்கலாம். அப்படி இருக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அது அப்படி இருக்கலாம். அது சரிதானே? பின் கர்த்தர் அவருடைய ஆவியின் வல்லமையின் மூலமாக, இயேசு கிறிஸ்து தாமே செய்தது போல ஒரு வெளிப்பாட்டை எனக்கு காட்டி, மற்றும் நாமும் அப்படி செய்வோம் என்ற சொன்னார். இது கர்த்தருடைய வார்த்தைக்கு ஒத்து வருகிறது. நீங்கள் நம்புவீர்களா? 69. என்னுடைய மனிதனே, நீர் மிகவும் சுகவீனமாய் இருக்கிறீர். உன்னுடைய பிரச்சனை உன்னுடைய நுரையீரலில் இருக்கிறது. உனக்கு ஒரு நுரையீரல் பிரச்சனை இருக்கிறது, அது மருத்துவரால் முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. அது..........அது சரி தானே? மற்றும் அதுக்கு விராதமாக நீர் ஒரு மகா மோசமான காரியம் இந்த உலகத்தில் செய்து கொண்டிருக்கிறாய். நீ அதோடு சிகரட்டுகளை புகை பிடித்துக் கொண்டிருக்கிறாய். மேலும் நீர் புகைப்பிடிக்கும் சிகரெட்டானது, அதில் உள்ளவற்றை ஒரு காகிதத்தில் தட்டி இப்படியாக சுருட்டி புகை பிடிக்க வேண்டும். அது சரிதானே? நீங்கள் அதை நிறுத்திவிட்டு, கிறிஸ்துவுக்கு இப்பொழுதே உங்களுடைய வாழ்க்கையை அப்படியே சமர்ப்பிப்பீர்களா? அப்படி செய்வீர்களா? தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஏழை மகனை கட்டி போட்டிருக்கும் பிசாசை கடிந்துகொள்கிறேன். மற்றும் அவர் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக விடுதலை பெறட்டும். ஆமேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் சொல்லலாம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது வாழ்ந்திருங்கள். கர்த்தராகிய இயேசு உங்களோடு கூட இருப்பாராக. 70. நீங்கள் நம்புவீர்களா? கர்த்தருடைய இரக்கம், அவருடைய கருணை...........இப்போது.... ஓ எப்படி அவர் இப்போது..........இந்த கட்டடத்தில் உள்ள எல்லா இருதயமும் ஒன்று போல துடித்து கொண்டிருக்க, எல்லா மக்களையும் இப்போது கூட்டிசேர்த்து, அது எல்லா இருதயங்களும் நொறுங்கி உங்கள் மேல் விழுவது போல் இருக்கும். நான் உங்களிடம் உண்மையை தான் சொல்கின்றேன். நான் நான் நான் பொய் சொல்ல மாட்டேன். நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்பதை கர்த்தர் சாட்சி கொடுப்பாராக. மற்றும் கிறிஸ்தவ நண்பர்களே! இப்படிப்பட்ட தான காரியங்கள் நடைமுறையில் உலகமெங்கும் நான் கண்டிருப்பதற்குச் சாட்சி பகர்கிறேன். மற்றும் அதுதான் உண்மை. இது உங்களுக்கு கொஞ்சம் வினோதமாக தான் இருக்கும் என்பது எனக்கு தெரியும், ஆனால் அதுதான் உண்மை. கர்த்தர் அது உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். சற்று விசுவாசம் வையுங்கள். இதுதான் நோயாளியா? நீங்கள் இந்த காரியங்களை நம்புகிறீர்களா? வேறு யாருக்காகிலும் அப்படியா? அவர்கள் இங்கே இல்லையா? இரண்டு பேர்கள், அவர்கள் இளம் பெண்கள். மற்றும் அவ்விரண்டு பேரும் கிழக்கத்திய நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் உங்களுடைய உடன்பிறந்தவர்களின் பிள்ளைகள். ஒருவருக்கு நரம்பு தளர்ச்சி மற்றொருவர் நோயுற்றோரை கவனிப்பதற்கான இல்லத்தில் அல்லது வேறெங்கேயோ இருக்கிறார். அவர்களுக்கு நுரையீரல் பிரச்சனை. காசநோய் பிரச்சனை. ஒருவர் வெஸ்ட் வெர்ஜினியாவில் உள்ளவர். மற்றொருவர் மேரிலாந்தில் உள்ளார். அது சரிதானே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களுக்கு நான் ஆசீர்வாதங்களை அனுப்புகிறேன், மற்றும் கர்த்தருடைய மகிமைக்காக அவர்கள் சுகமாக வேண்டும். மற்றும், இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு வீரமும் துணிச்சலும் உள்ள என் சகோதரியே, நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் செல்லலாம், அவர்களும் குணமாகட்டும். 71. எல்லாம் சரி, இங்கே வருவீர்களா பெண்மணியே? உங்கள் முழு இருதயத்தோடு நம்புவீர்களா? நம்புவீர்களா........நான் உங்களுக்கு ஒன்று செய்ய சொல்லுவேன், நீங்கள் அதற்கு கீழ்படிவீர்களா? இப்போது பாருங்கள். நீங்கள் வீட்டுக்கு சென்று உங்களுடைய இரவு உணவை சாப்பிடுங்கள். உங்களுடைய வயிற்றில் குடற் புன் என்று சொல்லக்கூடிய நோய் வெகு நாளாய் உள்ளது. இப்போது நீங்கள் சென்று சாப்பிட்டு கர்த்தருக்கு நன்றி சொல்லி, சந்தோஷமாய் களி கூறுங்கள். நீங்கள் சுகம் ஆவீர்கள். உங்கள் முழு இருதயத்தோடு நம்புவீர்களா? அந்த மூலையில் இருப்பவரை என்னால் பார்க்க முடியவில்லை, அவர் யார். உங்களுக்கு அந்த ஆஸ்துமா என்னும் வியாதியிலிருந்து விடுதலை பெற வேண்டுமா? உங்களுடைய சுகத்தை பெற்றுக் கொள்வீர்களா? தேவகுமாரனாகிய இயேசுவின் நாமத்தில் அவளுடைய ஆசீர்வாதம் அவளுக்கு கிடைக்கப்பெற்று, மற்றும் அவள் சுகம் அடைய வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரி. உங்கள் முழு மனதோடு அதை நம்பி விசுவாசத்துடன் செல்லுங்கள். 72. ஒருவேளை கர்த்தர், நம்முடைய பரலோகத்தின் பிதா அதை வெளிப்படுத்துவாரானால்.........எனக்கு மிகவும் பலவீனமாக இருக்கிறது, சகோதரியே, என்னால் கொஞ்சமும்......... முடியவில்லை. ஆகையால் நான்..........கர்த்தர் ஒரு வேளை பேசி மற்றும் சரியாக அவர் செல்வாரானால், அந்த கிணற்றண்டை நின்ற பெண்ணுக்கு செய்ததைப் போல, சரியாக உங்களுடைய பிரச்சனை எங்கே இருக்கிறது. உங்களுடைய சுகமாகுதலை ஏற்றுக் கொள்வீர்களா? இருதய பிரச்சனை. எல்லாம் சரி, நீங்கள் செல்லலாம். இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துவாராக எல்லாம் சரி. நீங்கள் நம்புவீர்களா? உங்கள் முழு மனதோடு நீங்கள் நம்புவீர்களா? என்னால முடியும்.........என்பதை நீங்கள் நம்புவீர்களா.......நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்கள் என்பதை அறிந்து, ஒரு வேளை கர்த்தர் உம்முடைய பிரச்சனை சரியா எங்கே உள்ளது என்று சொல்வாரானால் நீங்கள் உங்களுடைய சுகத்தை இப்பொழுது ஏற்றுக் கொள்வீர்களா? அது இயேசு கிறிஸ்து தான்............என்பதை நான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன்...........ஒருவேளை.........வேறு வார்த்தையில் சொல்லப்போனால், ஒருவேளை கர்த்தர் எல்லாருக்கும் நடந்தது போல, எனக்கு உம்முடைய பிரச்சனையை சரியாகவும், முழுமையாகவும் எங்கே இருக்கிறது என்பதை அறிவிப்பாரானால், அப்போது என்னுடைய வார்த்தைகள் உண்மை என்பதை அறிவீர்களா. அது சரிதான? மற்றும் என்னுடைய வார்த்தைகள் இதுதான், அதாவது இயேசு 1900 வருடங்களுக்கு முன்பாகவே உங்களுக்கு சுகத்தை கொடுத்துவிட்டார். எப்பொழுது அதை ஏற்றுக்கொள்வீர்களா? அது உங்களுடைய பின் பகுதி அது சரிதானே? இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சென்று சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். கர்த்தர் ஒருவேளை பேசி, மற்றும் அந்த கிணற்றண்டையில், நின்ற பெண்ணுக்கு செய்தது போல சரியாக உங்கள் பிரச்சனை எங்கே இருக்கிறது என்று சரியாக சொல்வாரானல் உங்களுடைய சுகமாகுதளை ஏற்றுக் கொள்வீர்களா? 73. வாருங்கள், ஆங்கிலத்தில் பேசுவீர்களா? வாருங்கள், நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நம்புவீர்களா? கர்த்தர் உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்கு தெரிவிப்பாரானால் நீங்கள் இயேசுவே உங்களை குணமாக்குபவர் என்பதை நம்புவீர்களா? நீங்கள் நம்புவீர்கள். அது சிறுநீரக பிரச்சனை. அது சரிதானே? இப்போது நீங்கள் குணம் பெற்று செல்லலாம். கர்த்தருடைய நாமத்திற்காக இயேசு கிறிஸ்து உங்களுக்கு சுகத்தை உங்களுக்கு சுகத்தை தந்து, குணமாக்குவார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பெண்மணியே எல்லாம் சரி. ஆங்கிலத்துல பேசுங்கள்? ஆங்கிலம் தெரியாதா. இங்கே யாராவது வியாக்கியானம் செய்வதற்கு உண்டா? உங்களுக்கு அது தேவையில்லை. நீங்கள் நம்புங்கள்? போய் சாப்பிடுங்கள். இயேசு உங்களுக்கு சுகம் தருகிறார். பரலோகத்தின் பிதாவே, இந்த வயிற்றில் உள்ள வியாதியை நான் சபிக்கிறேன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவள் சுகம் பெறட்டும். 74. உங்கள் முழு ஆத்துமாவோடே நம்புங்கள், உங்களுடைய இருதய பிரச்சனை சென்று விட்டது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சென்று சுகம் அடையுங்கள். ஆங்கிலத்தில் பேசுவீர்களா? கொஞ்சம்? நீங்கள் இந்தியரா. கார்லஸ், சான் கார்லஸ். ஓ நீங்கள்..........எல்லாம் சரி உங்களுக்கு நுரையீரல் பிரச்சனையும், மற்றும் காசநோய் உள்ளது. இயேசு கிறிஸ்து இன்று இரவு உங்களுக்கு சுகம் தர போகிறார் நீங்கள் மேலே சென்று அந்த மக்களுக்கு சொல்லுங்கள் "இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் மற்றும் ராஜரீகம் பண்ணுகிறார்." இந்த மனிதனுக்கு இதை செய்த அந்த பிசாசு சபிக்கப்படுவானாக. மற்றும் அவன் சுகம் பெற்று செல்வானாக. ஆமென். 75. நீங்கள் நம்புவீர்களா? இந்தக் கட்டடத்தில் உள்ள அனைவரும்..............விசுவாசம் வையுங்கள் பெண்மணியே. எனக்குத் தெரியும் எப்பொழுது உங்களுடைய குழந்தைக்கு...............அதுக்கு என்ன பிரச்சனை? அவர் என்ன சொல்லப் போகிறார் என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அவர் என்ன என்னிடம் சொல்லப் போகிறார் என்றால் உங்களுடைய கரங்களை அவன் மீது வை. உங்களுடைய இருதயத்தை தேவனுடைய மையப்பகுதியில் வைங்கள். நான் உங்கள் இடத்தில் என்ன தப்பு இருக்கிறது என்று சொல்ல அவசியம் இல்லை. அது நிச்சயமாக அதனுடைய நிலைமை என்னவென்று தெரிகிறது. யார் வேண்டுமானாலும் அதை பார்க்கலாம். சற்று விசுவாசம் மட்டும் வையுங்கள். உங்கள் முழு மனதோடு அதை நம்புங்கள். கர்த்தர் உங்களுக்கு சுகம் கொடுப்பார். கர்த்தர் அதை செய்வார். நான் அதை பார்த்துக் கொண்டிருக்கிறேன், அது முழு சபையார் மேலும் மேகத்தைப் போல மூடிக் கொண்டிருக்கிறது. அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும் அந்த மனிதனுக்கு, கல்லீரலில் புற்றுநோய் உள்ளது. உங்களுக்கு ஒரே ஒரு முறை தான் வாழ்வதற்குறிய தருணம் உண்டு. அது இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு சுகம் அளிப்பவராக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். அதை செய்வீர்களா? உங்கள் முழு இதயத்தோடு அதை நம்புங்கள். கர்த்தர் உங்களுக்கு சுகம் தருவார்? அதை ஏற்றுக்கொள்வீர்களா? அதைச் செய்வீர்கள் என்றால் நீங்கள் சுகம் பெறுவீர்கள். 76. அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு நுரையீரலில் பிரச்சனை உண்டு. அதை நீங்கள்.............ஓ ஆமாம். உங்கள் முழு மனதோடு நம்புவதற்கு விருப்பம் இருந்தால், சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இங்கே இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் இந்த நேரத்தில் சுகத்தை பெறுவதற்கு விருப்பம் இருந்தால், இப்பொழுதே சுகமாக்கப் படுவீர்கள். எனக்காக ஒரு காரியம் நீங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நிமிடம் ஜெபத்திற்காக ஒருவர் மேல் ஒருவர் தங்கள் கரங்களை வைக்குமாறு கேட்கிறேன். ஒருவர் மீது ஒருவர் தங்கள் கரங்களை வைப்பீர்களாக. இப்போது, உங்கள் மூலமாக வரக்கூடியது தான் நான்_ நான் பேசிக் கொண்டிருப்பதற்கு சாட்சி. அது உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து. உங்களுடைய கரங்களாகப் பட்டது ஒருவரை ஒருவர் சுகமாக்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது, கர்த்தருடைய தூதன் உங்கள் மேல் இருக்கிறார், சாத்தான் கடிந்து கொள்ளப் படுகிறான், மற்றும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில், நீங்கள் சுகம் பெற்று விட்டீர்கள்.